பேட்டிங் வரிசையில் ரிஷப் பண்ட் எங்கு விளையாடனும்? தினேஷ் கார்த்திக் யோசனை

0
3330

டி20 உலக கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு இந்திய அணியில் முற்றிலும் இளம் வீரர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 37 வயதான தினேஷ் கார்த்திக் டி20 அணியில் இடம் பெறுவது சந்தேகமே. இதனால் தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பெறுவது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே நியூசிலாந்து தொடரில் ரிஷப் பண்டிற்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் எந்த இடத்தில் பேட்டிங்கிக் களம் இறங்கினால் கலக்குவார் என்பது குறித்து தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், என்னைப் பொறுத்தவரை ரிஷப் பண்ட், டெஸ்ட் அணியில் தன்னுடைய இடத்தை உறுதி செய்து விட்டார். ஒருநாள் அணிலும் ரிஷப் பண்ட்க்கு அணியில் இடம் இருக்கிறது .ஆனால் டி20 அணியில் பொறுத்தவரை ரிஷப் பண்ட், டெல்லி அணிக்காக ஒரு இடத்திலும் , இந்திய அணிக்காக வேறு இடத்திலும் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இதனால் ரிஷப் பண்டை, எந்த இடத்தில் களம் இறக்குவது என்பது குறித்து இந்திய அணி நிர்வாகம் யோசித்து வருகிறது. பேட்டிங் வரிசையில் விராட் கோலி ,சூரிய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா என மூன்று வீரர்களும் நடுவரசையில் இருப்பதால் நீங்கள் ரிஷப் பண்டை எங்கு தான் களம் இறக்க முடியும்.இதேபோன்று நடுவரசையில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது முக்கியம். விராட் கோலி மூன்றாவது இடத்தில் இருப்பதால் அவரை மாற்ற முடியாது.

சூரியகுமார் யாதவும் நம்பர் நான்காம் இடத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஹார்திக் பாண்டியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். என்னைக் கேட்டால் ரிஷப் பண்ட்க்கு தொடக்க வீரராக வாய்ப்பு வழங்குவது அவசியம். ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடக்கூடியவர் என்று நம் அனைவருக்கும் தெரியும். பவர் பிளேவில் வீரர்கள் உள் வட்டத்திற்குள் நிற்கும்போது அவருக்கு ரன் சேர்க்கும் வாய்ப்பு அதிகம் இருக்கும்.

இந்த ஒரு காரணத்திற்காகவே அவருக்கு தொடக்க வீரராக வாய்ப்பு வழங்கலாம். ஏற்கனவே இந்த இடத்தில் அவர் விளையாடி இருக்கிறார். அப்போது அவர் ஸ்டிரைக் ரேட் அதிகமாக இருந்திருக்கிறது. ஃபில்டர்கள் உள்ளே இருக்கும்போது, அவர் எந்த சர்வதேச பந்துவீச்சாளரையும் அடித்து நொறுக்கி அவருடைய உத்வேகத்தை குலைத்து விடுவார். ரிஷப் பண்டை தொடக்க வீரராக களம் இறக்கும் போது அவர் சில போட்டிகளில் சோபிக்க முடியாமல் போகலாம்.அதற்காக அவரை நாம் மாற்றி விடக்கூடாது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

- Advertisement -