இந்திய கிரிக்கெட் அணி இன்று நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை கடைசி சூப்பர் 8 ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி இந்த டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றி பெறுவதற்கு மிகவும் தீவிரமாக போராடும்.
இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் வலுவாக இருக்கிறது. இருப்பினும் சுழற் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் கடந்த சில போட்டிகளாக பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் இருக்கிறார். இருப்பினும் அவரது பந்து வீச்சு இந்த போட்டியில் இந்திய அணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இருக்கும் வேலையில் இது குறித்து தினேஷ் கார்த்திக் சில முக்கிய கருத்துகளை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “என்னை பொருத்தவரை இந்திய அணி இதே பிளையிங் லெவனில் களமிறங்க வேண்டும் என்று நினைப்பேன். இருப்பினும் ஒரு தூண்டுதல் இருக்க வேண்டும் என்றால் அது குல்தீப் யாதவாக இருக்கலாம். ஆனால் அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாட முடியாது என்று நினைக்கிறேன். இருப்பினும் அவர் ஒரு உரையாடலை மேற்கொள்ள முடியும். ஒருவேளை நீங்கள் அவர் விளையாட வேண்டும் என்று நினைத்தால் அது அர்ஸ்தீப் சிங்கிற்க்கு பதிலாக இருக்கலாம்.
ஆனால் நான் அதனை மேற்கொள்ள மாட்டேன். எனவே தற்போது இந்த லெலவனை மாற்ற முடியாது. இது தற்செயலாக அமைந்த அணி. எனவே இதனை மாற்ற முடியாது. எனவே இது போன்ற செல்வதுதான் சிறந்ததாக இருக்கும்” என்று தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.