இந்திய கிரிக்கெட்

கம்பீர் திட்டத்தை நான் சொல்றேன்.. ஹர்ஷித்ராணா விளையாட காரணமே இதுதான் – சீக்ரெட் உடைத்த தினேஷ் கார்த்திக்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் வெற்றி பெறுவதற்கு இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா? என்பது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் சில முக்கியமான கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடருக்குப் பிறகு தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு போட்டி நடைபெறாமல் முடிவடைந்தது. இந்த சூழ்நிலையில் இன்று இரண்டாவது போட்டி நடைபெற உள்ள நிலையில் வெற்றிக் கணக்கை துவங்க இரண்டு அணிகளும் போராடும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியைப் பொறுத்தவரை எட்டாம் இடம் வரை பேட்டிங் ஆழம் வேண்டும் என்று இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் விரும்புகிறார். அதற்குத் தகுந்தவாறு இந்த தொடருக்கு நித்திஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்ட நிலையில் காயம் காரணமாக அவர் வெளியேறி இருப்பது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் அவருக்கு பதிலாக இந்திய அணி ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தினேஷ் கார்த்திக் சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இல்லை, இந்திய அணியை பொறுத்தவரை இந்த தொடருக்கு பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யாது என்று நினைக்கிறேன். நித்திஷ் குமார் ரெட்டி இல்லாததால் அவர்கள் எந்த மாற்றங்களையும் பெரிதாக செய்ய மாட்டார்கள் என்று தோன்றுகிறது. எனவே அவர்கள் எட்டாவது இடம் வரை பேட்டிங் ஆழத்தை பெற விரும்புவதால் ஹர்ஷித் ராணாவை பேட்டிங் செய்ய விரும்புகிறார்கள்.

இதையும் படிங்க:மகளிர் உலககோப்பையில் இந்தியா படைத்த சாதனை விவரம்.. சேஸிங்கில் புதிய ரெக்கார்ட்.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பைனலுக்கு தகுதி

அதுவே ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை ஜோஷ் ஹேஸில் வுட் மேலும் ஒரு ஆட்டத்தில் விளையாடுவார் என்று தெரிகிறது. பார்ட்லெட்டை பார்க்கும் போது அவர்கள் ஆசைப்படக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் இடது கை விருப்பம் கொண்டு வருவதற்கு அவர்கள் விரும்புவது போல தெரிகிறது. எனவே ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை முந்தைய போட்டியில் விளையாடிய அணியை இந்த ஆட்டத்தில் விளையாட வைப்பார்கள் என்று தெரிகிறது எனவே இந்த ஆட்டத்தை பொருத்தவரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by