2 இன்னிங்ஸ் 23 ரன்.. ஏன் அவசரப் படுறீங்க.?. கிங் கோலி கிட்ட தான் அந்த மேட்ச்சுக்கு வரணும் – தினேஷ் கார்த்திக் பதிலடி

0
128
Dinesh karthik and Virat kohli

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்று கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இதற்காக இரண்டு அணி வீரர்களும் மிகத் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி பேட்டிங் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப அதற்கு முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

கடைசியாக விராட் கோலி 2023 – 2024 தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடியதற்குப் பிறகு நீண்ட காலம் கழித்து தற்போது வங்கதேச அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு திரும்பி இருக்கிறார். அதற்கு முன்னதாக பெரும்பாலும் டி20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலேயே அதிக கவனம் செலுத்தியதால் வங்கதேசம் எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டியில் இன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக ரசிகர்கள் விராட் கோலியின் பேட்டிங் குறித்து சமூக வலைதளங்களில் தங்களது விமர்சனத்தை தெரிவித்து வந்தனர். இந்த சூழ்நிலையில் ரசிகர் ஒருவர் விராட் கோலியின் பேட்டிங் டெக்னிக்கில் இன்னும் அதிக வேலை செய்ய வேண்டுமா? என்று கேட்டதற்கு தினேஷ் கார்த்திக் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் “கோலி டெஸ்ட் தொடருக்கு மீண்டும் திரும்புவதை பார்க்க நாங்கள் ஆவலாக இருக்கவில்லை. அவர் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன்தான். ஆனால் இருப்பினும் பேட்டிங்கில் ஒரு சில விஷயங்களில் அவர் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்று தினேஷ் கார்த்திக்கிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக் “ஏன்? இரண்டு இன்னிங்ஸ்களில்தானே அவர் அவுட் ஆகி இருக்கிறார். விராட் கோலி தற்போது மிகச் சரியாகவே இருக்கிறார். ஒரே ஒரு டெஸ்ட் போட்டி அவரது வாழ்க்கையில் எதையுமே மாற்றி விடாது. பெரிய போட்டிகளில் விராட் கோலி ஒரு சாம்பியன் வீரர் என்பதை மறக்கக்கூடாது. பெரிய போட்டிகளுக்கு விராட் கோலிதானே உங்களுக்கு வேண்டும்? விராட் கோலி ஒரு சாம்பியன் தான்” என்று கூறியிருக்கிறார்.

எனவே இன்று நடைபெற இருக்கும் இரண்டாவது போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -