இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு தொடர்களையும் இந்திய அணிக்காக வெற்றி பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
வெற்றிகரமான கேப்டன்களின் பட்டியல்
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி இதுவரை டி20, ஒருநாள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று வடிவ கோப்பைகளையும் இந்திய அணிக்காக வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். அதற்குப் பிறகு கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட் கோலி இருதரப்பு மற்றும் முத்தரப்பு தொடர்களில் அதிக வெற்றிகளை பெற்றிருந்த போதும் ஐசிசி தொடர்களில் சாதிக்க முடியவில்லை. இந்த நிலையில் அவருக்கு பிறகு பொறுப்பேற்ற ரோஹித் சர்மா 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பையில் இறுதி போட்டி வரை வந்து கோப்பையை நழுவி விட்டார்.
இருப்பினும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வெற்றி பெற்று சாதனை படைத்த ரோகித், அதற்கு பிறகு தற்போது நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் வெற்றி பெற்று வெற்றிகரமான கேப்டன்களின் வரிசையில் கபில்தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனிக்கு அடுத்த இடத்தில் இணைந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கபில் தேவ் மற்றும் தோனி விட்டுச் சென்ற பாரம்பரியத்தை இப்போது ரோகித் சர்மாவும் விட்டுச் செல்கிறார் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
தினேஷ் கார்த்திக் பேட்டி
இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் போது “இந்திய அணியில் தற்போது ரோகித் சர்மா மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் என்பது எந்த விதமான சந்தேகமும் இல்லை. அவர் இப்போது ஒரு தீவிரமான பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார். மகேந்திர சிங் தோனி மற்றும் கபில்தேவ் என ஒவ்வொருவரும் ஒரு தலைமுறையின் மாற்றத்தையும், மனநிலை மாற்றத்தையும் குறிக்கின்றனர்.
இதையும் படிங்க:இந்தியாவுக்கு வராதனு மிரட்டுனாங்க.. நான் பயந்து ஒளிந்து கொண்டேன்.. 2021 டி20 WC குறித்து வருண் சக்கரவர்த்தி
இது ரோகித் சர்மாவை ஒரு நபராக சுருக்கமாக கூறுகிறது. அதே நேரத்தில் இது மிகவும் நகைச்சுவையானது. மேலும் ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து அவர் இதனை அவசரப்படுத்தாதீர்கள், நான் விரும்பும் போது அதனை நிச்சயம் செய்வேன் என்ற செய்தியையும் அனுப்புகிறது” என்று தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரோடு ரோஹித் சர்மா ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் ஓய்வு பெறுவதற்கான திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ரோஹித் சர்மா வெளிப்படையாக அறிவித்து விட்டார். இதனால் அவர் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை வரை இந்திய அணிக்காக விளையாடுவார் என்று தெரிகிறது.






