இந்திய கிரிக்கெட்

மில்லர் இல்லை.. ஐபிஎல் ஏலத்தில் 24 வயதான தென் ஆப்பிரிக்க பையன்.. பெரிய விலைக்கு போவார் – தினேஷ் கார்த்திக் கணிப்பு

நடக்க இருக்கும் ஐபிஎல் மெகா ஏலத்தில் தென் ஆப்பிரிக்காவில் 24 வயது வீரர் ஒருவர் அதிகபட்ச தொகைக்கு ஏலத்திற்கு போவார் என இந்திய முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் 17வது சீசனுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு இந்த மாதம் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் சவுதி அரேபியா ஜெட்டா நகரில் நடைபெற இருக்கிறது. இந்த மெகா ஏலத்தில் ஒட்டுமொத்தமாக 1547 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருக்கிறார்கள். லெஜன்ட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல்முறையாக தன்னுடைய பெயரை ஐபிஎல் ஏலத்தில் பதிவு செய்திருக்கிறார்.

ஐபிஎல் நிர்வாகத்தின் அதிரடி முடிவு

இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக நடைபெற்ற ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் பஞ்சாப், டெல்லி மற்றும் பெங்களூர் தவிர மற்ற ஏழு அணிகளும் குறைந்தது எட்டு வீரர்களை தக்க வைப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென தங்கள் கோரிக்கையை முன் வைத்திருந்தன. பழைய முறையில் மூன்று இந்திய வீரர்களை மட்டும் தக்க வைக்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தன.

இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஆறு இந்திய வீரர்களையும் தக்கவைத்துக் கொள்வதற்கு வழிவகை செய்தது. அதே சமயத்தில் ஆறு வீரர்களை தக்க வைக்கும் பொழுது மொத்தம் 79 கோடி ரூபாய் செலவாகும் வகையில்வீரர்களுக்கான சம்பளத்தை அமைத்தது. இதன் காரணத்தால் எல்லா அணிகளும் ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முன்வரவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் மட்டுமே ஆறு வீரர்களை தக்க வைத்திருக்கிறது. மேலும் தென் ஆப்பிரிக்காவின் ஹென்றி கிளாசன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகத்தால் மிக அதிகபட்சமாக 23 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இவர் அதிக விலைக்குப் போவார்

இந்த மெகா ஏலம் குறித்து பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “ஜெரால்ட் கோட்சிக்கு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் எவ்வளவு சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பது குறித்து எனக்கு சரியாக தெரியாது. ஆனால் அடுத்த வாரத்தில் அவர் ஐபிஎல் ஏலத்தில் பெரிய தொகைக்கு செல்ல இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் திங்கிங் கிரிக்கெட்டர். மேலும் அவர் தன்னுடைய பேட்டிங்கிலும் உழைத்திருக்கிறார். அவர் ஒப்பேற்றிக் கொள்ள நினைக்கும் வீரர் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: இந்திய பேட்ஸ்மேன்களால் எங்களின் இதை சமாளிக்க முடியாது.. 2 பேர் செஞ்சாதான் உண்டு – ஆஸி பிராட் ஹேடின் பேச்சு

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஜாகிர் கான் கூறும் பொழுது “அவரது பேட்டிங்கில் நல்ல சக்தி இருக்கிறது. அவர் அந்த பாத்திரத்தில் விளையாட விரும்புகிறார் மற்றும் தயார் ஆகிறார் என்பது தெரிகிறது. அவர் விளையாட்டில் சரியான பங்களிப்பை கொடுப்பதற்கு முயற்சி செய்கிறார். மேலும் அவர் பந்துவீச்சில் மட்டும் இல்லாமல் பேட்டிங்கிலும் பங்களிக்க நினைக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts