முதல் 3 ரன்.. தோனியின் சாதனை முறியடிப்பு.. டி20 கிரிக்கெட்டில் வரலாற்றை எழுதிய தினேஷ் கார்த்திக்.. எஸ்ஏ டி20

0
314

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதல் மூன்று ரன்கள் எடுத்து முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் டி20 ரன்கள் சாதனையை முறியடித்து இருக்கிறார்.

- Advertisement -

தோனியின் சாதனையை முறியடித்த தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடினார். அதனோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றொரு அணியான பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல்ஸ் அணி டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது.

இந்த நிலையில் களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் தோனியின் சாதனையை முறியடிக்க அப்போது அவருக்கு 3 ரன்கள் தேவைப்பட்டது. மொத்தமாக 15 பந்துகள் விளையாடிய நிலையில் இரண்டு சிக்ஸர்கள் மூலமாக 21 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக தினேஷ் கார்த்திக் ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த மகேந்திர சிங் தோனியின் சாதனையை முறியடித்தார். டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தினேஷ் கார்த்திக் 361 இன்னிங்ஸ்கலில் 7541 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் 34 அரை சதங்கள் அடங்கும்.

- Advertisement -

முன்னணியில் எம்எஸ் தோனி

மகேந்திர சிங் தோனி 342 இன்னிங்ஸ்கள் விளையாடி 28 அரை சதங்கள் உதவியுடன் 7432 ரன்கள் குவித்திருக்கிறார். தோனி இதுவரை 517 பவுண்டரிகள், 338 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அதே வகையில் தினேஷ் கார்த்திக் மொத்தமாக 258 சிக்சர்கள் மற்றும் 718 பவுண்டரிகள் விளாசியுள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக தோனி 7160 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் தினேஷ் கார்த்திக் 6547 ரன்கள் குவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையில் மகேந்திர சிங் தோனி முன்னணியில் இருக்கிறார்.

இதையும் படிங்க:சின்ன டீம்கிட்ட எங்க தரத்தை இழக்கிறோம்.. இந்த விஷயத்தை சரி செய்யணும் – பாக் முன்னாள் கேப்டன் பேட்டி

மேலும் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி 5125 ரன்கள் குவித்து முதல் இடத்தில் இருக்கும் நிலையில் தினேஷ் கார்த்திக் 4463 ரன்கள் குவித்து பின்னணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டோடு ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற நிலையில் தோனி இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் தோனி களமிறங்கி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -