அஸ்வினுக்கு என்ன குறைச்சல்… இந்திய அணிக்கு கேப்டனாக்குங்கள்! – ஏன் தகுதியானவர்? தினேஷ் கார்த்திக் பேட்டி!

0
278

“அஸ்வினை விட வேறு எவரும் தகுதியாக இருக்க முடியாது. ஏசியா கேம்ஸ் கிரிக்கெட்டில் அஸ்வினை கேப்டன் ஆக்குங்கள்.” என்று பேசியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஏசியா கேம்ஸ் வருகிற செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஏசியா கேம்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகளும் இந்த வருடம் நடைபெறுகிறது. இந்திய பெண்கள் அணி இம்முறை கலந்து கொள்வதாக பிசிசிஐ தரப்பு அறிவித்திருக்கிறது.

- Advertisement -

ஆண்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி கலந்து கொள்கிறதா? இல்லையா? என்பது குறித்த தகவல்கள் பிசிசிஐ தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இருப்பினும் சிலர் ஏசியா கேம்ஸ் கிரிக்கெட் தொடருக்கு செல்லும் இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட உள்ளார் என பரப்பி வருகின்றனர்.

இதற்கும் ஒரு படி மேலே சென்று ஷிக்கர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய முன்னணி வீரர்களுள் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் பேசி வருகின்றனர். டி20 ஃபார்மெட்டில் ஏசியா கேம்ஸ் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

அக்டோபர் ஐந்தாம் தேதி உலகக்கோப்பை துவங்குகிறது. அதனுடன் சில ஏசியா போட்டிகள் இடர்படுகிறது. ஆகையால் முதன்மை இந்திய அணி செல்லாது. இரண்டாம் கட்ட இந்தியா அணியை அனுப்புவதற்கான அனேக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

ஏசியா கேம்ஸ் கிரிக்கெட் தொடருக்கு செல்லும் இந்திய அணியின் கேப்டனாக ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட வேண்டும் என்று தனது கருத்தை கூறியதோடு, ஏன் என்றும் பகிர்ந்து கொண்டார் தினேஷ் கார்த்திக்.

இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக வருவதற்கு முழு தகுதியையும் உடையவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தனது செயல்பாட்டின் மூலம் இந்த மதிப்பை பெற்று இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் தான் அவருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் வருகிற ஏசியா கேம்ஸ் கிரிக்கெட் தொடரில் இவருக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்து அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.” என்று தினேஷ் கார்த்திக் பேசினார்.