11 ஓவர்.. தடுமாறும் நடராஜன் சாய் கிஷோர்.. பட்டைய கிளப்பிய அஸ்வினின் திண்டுக்கல்.. திருப்பூரை வீழ்த்தி வெற்றி

0
621
Ashwin

நடப்பு டிஎன்பிஎல் தொடரில் இன்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் திண்டுக்கல் அணி 11 ஓவர்களில் வெற்றி பெற்று அசத்தியது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் ப்ந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. மழையின் காரணமாக இந்த போட்டியில் 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. மூன்று வீரர்களுக்கு தலா மூன்று நபர்கள் அதிகபட்சம் வீசலாம் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ராதாகிருஷ்ணன் 30 பந்தில் 36 ரன்கள், துஷார் ரகேஜா 26 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மூன்றாவது இடத்தில் வந்த அமித் சாத்விக் 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். கடைசியில் மூன்று பேட்ஸ்மேன்கள் முக்கியமான எட்டு பந்துகளை சந்தித்து அதில் நான்கு ரன்கள் மட்டுமே எடுத்தார்கள்.

இதன் காரணமாக 13 ஓவர் கொண்ட போட்டிக்கு அதிரடியாக திருப்பூர் அணி ரன்களை குவிக்கவில்லை. அந்த அணி 13 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் அணியின் தரப்பில் சுபோத் பாடி மூன்று ஓவர்களுக்கு 14 ரன்கள் மட்டுமே தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று ஓவர்களுக்கு 29 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி மூன்று ஓவர்களுக்கு 28ரன்கள் தந்து விக்கெட் கைப்பற்றவில்லை.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் அணிக்கு துவக்க ஆட்டக்காரர் விமல் குமார் 16 பந்தில் 17 ரன்கள், இன்னொரு துவக்க ஆட்டக்காரர் சிவம் சிங் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத் தொடர்ந்து பாபா இந்தரஜித் 25 பந்துகளில் 31* ரன், பூபதி குமார் 25 பந்தில் 51* ரன் என அதிரடியாக எடுக்க, திண்டுக்கல் அணி 11.2 ஓவரில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : மாற மாட்டோம்.. வெஸ்ட் இண்டீஸ் எடுத்த தைரியமான முடிவு.. இங்கிலாந்து அணிக்கு விட்ட சவால்.. 2வது டெஸ்ட் பிளேயிங் லெவன்

இந்த போட்டியில் திருப்பூர் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் நடராஜன் இரண்டு ஓவர்களுக்கு 22 ரன்கள், சாய் கிஷோர் 1.5 ஓவருக்கு 29 ரன்கள் கொடுத்தார்கள். மேலும் இருவருமே விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. ஐபிஎல் தொடரில் கலக்கிய நடராஜனுக்கு நடப்பு டிஎன்பிஎல் தொடர் மிகச் சுமாராகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -