இந்தியாவில் அடுத்த நடைபெறும் டெஸ்ட் தொடர்களுக்கு தரமான ஆடுகளங்களை தயாரிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்தை இந்திய முன்னாள் தேர்வுக்குழு தலைவர்
திலிப் வெங்சர்கர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்திய அணி தற்போது பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் கடினமான சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முடித்து விட்டு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய அணி அடுத்து இரண்டு டெஸ்ட் தொடர்களில் இந்தியாவில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி சொந்த மண்ணில் அக்டோபர் 2 வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், நவம்பர் 14 தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்திய அணி நிர்வாகம் மீண்டும் உள்நாட்டில் சுழல் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளங்களை அமைத்து விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வெளியில் செல்லும் பொழுது இந்திய அணிக்கு பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் உள்நாட்டில் சுழல் பந்துவீச்சை எதிர்த்து விளையாடுவதிலும் இந்திய அணிக்கு பிரச்சனை இருக்கிறது.
பொதுவாக கேப்டன் மற்றும் பயிற்சியாளர் சொந்த மண்ணில் தங்களுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி போட்டிகளை வென்று அழுத்தத்தை குறைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இதன் மூலம் கிரிக்கெட் வாரியத்துக்கு பதில் சொல்ல வேண்டியதில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். ஆனால் தரமான ஆடுகளங்களை அமைக்காவிட்டால் எதிர்காலத்தில் பிரச்சனை இருக்கிறது.
இதையும் படிங்க : ஐபிஎல்-ல அம்பானி கிட்ட பேசி பும்ராவ பத்தி அந்த விஷயத்தை முடிச்சிருப்பேன்.. அகர்கர் செஞ்ச அது தப்பு – வெங்சர்கர் விமர்சனம்
இதுகுறித்து திலீப் வெங்சர்கர் கூறும் பொழுது “வரவிருக்கும் சர்வதேச டெஸ்ட் சீசனிலும் இந்திய கிரிக்கெட் வாரியம் உள்நாட்டில் தரமான ஆடுகளங்களை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். உள்நாட்டில் சாதகமான ஆடுகளங்களை அமைத்து வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகின்ற கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் குறுகிய கால ஆதாயங்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அடிபணிய கூடாது” என்று கூறியிருக்கிறார்.