பந்தை சேதப்படுத்திய புகாரில் ரவீந்திர ஜடேஜாவுக்கு வித்தியாசமான தண்டனை? ஏன் எதனால்?

0
430
Jadeja

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி தற்பொழுது முடிந்திருக்கிறது!

இந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து ஆஸ்திரேலியா அணி 177 மற்றும் 91 ரன்கள் மட்டுமே எடுத்து இருபது விக்கெட்டுகளை பறிகொடுத்தது!

- Advertisement -

இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் விளையாடி நானூறு ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடிக்க, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் அரை சதங்கள் எடுத்தனர். இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் இரண்டு விக்கெட் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் 70 ரன்கள் எடுத்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் ஆனார்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸ் இந்திய பந்துவீச்சின் போது ரவீந்திர ஜடேஜா பந்து வீசும் கைவிரல்களுக்கு ஒரு கிரீமை பயன்படுத்தினார். அது வலிக்கு பயன்படுத்தும் மருந்து என்று சொல்லப்பட்டது.

இந்த சமயத்தில் அவர் கையில் பந்தும் இருக்க, ஆஸ்திரேலியா ரசிகர்கள் தரப்பில் இருந்து ரவீந்திர ஜடேஜா பந்தை சேதப்படுத்தியதாகவும் ஐசிசி இதில் தலையிட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் வேகமாக செய்தி பரவியது.

- Advertisement -

இதற்கு அடுத்து இதை ஆட்ட நடுவர்கள் அணுக ரவீந்திர ஜடேஜா விதிமுறையை மீறி உள்ளது தெரிய வருகிறது. நடுவர்களின் அனுமதி உடன் இதில் ரவீந்திர ஜடேஜா ஈடுபடாதது தவறு என்று கூறப்பட்டுள்ளது.

ஐசிசி நடத்தை விதிகளின்படி இது லெவல் 1 குற்றமாகும். இதனால் அவருக்கு நன்னடத்தை செயல்பாட்டில் ஒரு புள்ளி குறைக்கப்பட்டது. அதே நேரத்தில் அவரது போட்டி கட்டணத்தில் இருந்து 25% அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இது பந்தை சேதப்படுத்தியதில் சேரவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது!