ஐபிஎல்

43,000 கோடிக்கு ஐபிஎல் தொலைகாட்சி உரிமத்தை பெற்றதா சோனி நிறுவனம் ? உண்மை நிலவரம் என்ன ?

சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் பேச்சு ஐபிஎல் மீடியா உரிமை பற்றி தான். 2023 முதல் 2027 வரையிலான ஐபிஎல் தொடருக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை தனியார் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. நமக்குக் கிடைத்திருக்கும் தகவலின் படி 43,050 கோடி ரூபாய்க்கு இந்த முறை ஐபிஎல் மீடியா உரிமை விற்கப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒரு போட்டிக்கு 105 கோடி ரூபாய்

பேக்கேஜ் ஏ மற்றும் பேக்கேஜ் பி தரப்புக்கு இடையே தற்போது ஏலம் முடிந்துள்ளது. பேக்கேஜ் ஏ’வில் சோனி நிறுவனம் தொலைக்காட்சி உரிமையை 23,575 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது உறுதியாகி விட்டது. 410 போட்டிகள் இந்த ஐந்து ஆண்டு கால சுழற்சியில் நடைபெற இருக்கும் நிலையில் ஒரு போட்டியில் தொலைக்காட்சி உரிமை இந்திய மதிப்பில் 57 கோடியே 50 லட்ச ரூபாய் ஆகும்.

பேக்கேஜ் பி டிஜிட்டல் உரிமையை கொண்டது. டிஜிட்டல் ஒருமையை பொருத்தவரையில் ஒரு போட்டிக்கு 48 கோடி ரூபாய் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிஜிட்டல் உரிமை ஐந்து ஆண்டுக்கு சேர்த்து 19,680 கோடி ரூபாயாகும். இன்று மதியம் 2 மணி அளவில் ஆக்ஷனில் பேக்கேஜ் ஏ வின்னர் பேக்கேஜ் பி வின்னரை சேலஞ்ச் செய்யப் போவதாகவும் நமக்குத் தகவல் வெளியாகி உள்ளது. ஏறக்குறைய டிஜிட்டல் உரிமையையும் சோனி நிறுவனத்திற்கே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தற்பொழுது நாம் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு ஐபிஎல் போட்டியின் (தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை சேர்த்து) மதிப்பு அல்லது விலை 105 கோடியே 50 லட்ச ரூபாய் என்பது தான். இன்று மதியம் நடக்க இருக்கும் ஆக்ஷனில் என்னன்னு திருப்பங்கள் நடைபெறப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by