பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவதற்கான கேட்ச்சை தவறவிட்ட ரோஹித் சர்மா அதற்கு பரிகாரமாக தந்த வாக்குறுதியை நிறைவேற்றினாரா? என்பது குறித்து அக்சர் படேல் விளக்கம் அளித்திருக்கிறார்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நியூசிலாந்து அணி பங்களாதேஷ் அணியை வென்றதின் மூலமாக ஒரே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளை அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியேற்றி இருக்கிறது. இத்துடன் இந்த வெற்றியின் மூலமாக நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் அரையிறுதிக்கு வாய்ப்பு பெற்று இருக்கின்றன.
அக்சர் படேலுக்கு அமைந்த வாய்ப்பு
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அக்சர் படேல் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் காரணமாக அவருக்கு ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தும் அருமையான வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் அடுத்து விளையாட வந்த ஜாகேர் அலி அக்சர் படேல் பந்துவீச்சில் ஸ்லிப்பில் இருந்த ரோகித் சர்மாவுக்கு எளிதான ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். அப்போது பேட்ஸ்மேனுக்கு அருகில் இருந்த இந்திய பீல்டர்கள் அனைவருமே ஹாட்ரிக் விக்கெட் கிடைத்து விட்டதாக கொண்டாட ஆரம்பித்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோகித் சர்மா எளிய கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார்.
ரோகித் சர்மா தந்த வாக்குறுதி
ஐசிசி தொடரில் அக்சர் படேலுக்கு கிடைக்க இருந்த அரிய ஹாட்ரிக் விக்கெட் வாய்ப்பை தான் கெடுத்து விட்டதற்கு ரோகித் சர்மா களத்தில் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். மேலும் அக்சர் படையல் இடம் மன்னிப்பு கேட்டார். இதற்கு பரிகாரமாக விளையாட்டாக அவரை இரவு உணவுக்கு வெளியில் அழைத்துச் செல்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: உண்மையா சொல்றேன்.. நான் கில் விக்கெட்டை அப்படி கொண்டாட காரணம் இது தான் – அப்ரார் அகமது விளக்கம்
இது குறித்து பேசி இருக்கும் அக்சர் படேல் கூறும் பொழுது “தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாங்கள் அடுத்த போட்டியை விளையாடுவதற்கு ஆறு நாட்கள் இடைவெளி இருக்கிறது. மேலும் நாங்கள் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்டோம் என்று நினைக்கிறேன். இதனால் ரோகித் பாய் இரவு உணவுக்கு அழைத்துச் செல்வதாக கொடுத்த வாக்குறுதி பற்றி அவரிடம் நான் கேட்கலாம் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.






