தோனி பிரஷரில் கடைசிப் பந்தை பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டாரா? உண்மையில் நடந்தது என்ன? வீடியோ ஆதாரம் இதோ!

0
5063
Dhoni

பல உணர்வுபூர்வமான நிகழ்வுகளின் தொகுப்பாகப் பதினாறாவது ஐபிஎல் சீசன் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது!

குறிப்பாக இந்த ஐபிஎல் சீசன் முழுவதிலும் மகேந்திர சிங் தோனி மீதான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அன்பு அளவற்ற முறையில் இருந்தது!

- Advertisement -

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரும்பி இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எங்கு சென்று விளையாடினாலும் மஞ்சளாகவே நிறைந்து இருந்தது.

காரணம், மகேந்திர சிங் தோனி எத்தனைக் காலம் விளையாடுவார்? என்று உறுதியாகத் தெரியாததால் மற்ற அணிகளின் ரசிகர்களும் மைதானத்திற்கு மஞ்சள் ஆடையில் வந்து, அவர் மீதான தங்களது அன்பை தெரிவித்தனர்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்றுப் போட்டி நடந்த குஜராத் அகமதாபாத் மைதானத்திலும் பெரிய அளவில் மஞ்சளாகவே காட்சி அளித்தது. நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்ல, அது பல மாதிரியான உணர்வுகளின் ஒட்டுமொத்த தொகுப்பாக அமைந்தது.

நேற்று கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றிக்கு நான்கு ரன்கள் தேவைப்பட்ட பொழுது, அந்தப் பந்தை பார்க்காமல் தோனி தலையைக் கீழே குனிந்து கொண்டார் என்று தமிழ் கமெண்டரியில் சொல்லப்பட்டது மேலும் சில புகைப்படங்கள் பரவியது. ரசிகர்களும் உருக்கமாக அந்தப் புகைப்படத்தைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பேசி வந்தனர்.

எவ்வளவு பெரிய அழுத்தமான சூழ்நிலையிலும் எந்தவித அழுத்தமும் இல்லாமல், அணி வீரர்களையும் அழுத்தத்தை உணர விடாமல் வைத்திருப்பதில்தான் மகேந்திர சிங் தோனி மிகவும் சிறந்தவர். அவருடைய தனித்த அடையாளமே அதுதான்!

இப்படி இருக்க கடைசிப் பந்தை பார்க்க முடியாமல் மகேந்திர சிங் தோனி தலையைக் கீழே குனிந்து கொண்டார் என்கின்ற செய்தி வலைதளங்களில் வேகமாகப் பரவ, பலருக்கும் அது ஆச்சரியமானதாக இருந்தது.

மேலும் அவருடைய ரசிகர்கள் ” இந்த ஒரு கோப்பைக்காக நீங்கள் தலையைக் கீழே குனிந்து கொள்ள வேண்டுமா? நீங்கள் எத்தனையோ கோப்பைகளை எங்களுக்காக வாங்கி கொடுத்திருக்கிறீர்கள். எங்களுக்கு அதுவே போதும்!” என்று நெகிழ்ச்சியாக தங்களதுஅன்பை வெளிப்படுத்தினார்கள்.

ஆனால் உண்மையில் அந்த கேமரா கோணத்தில் ஒளிபரப்பில் ஏற்பட்ட சிக்கலால் தோனி பார்வையைத் தாழ்த்தியதோடு நின்று விட்டது. இதனால் அவர் கடைசிப் பந்தை பார்க்காதது போல் தெரிந்தது. ஆனால் உண்மையில் அவர் அந்தப் பந்தை பார்க்கவே செய்தார். தோனி பழைய தோனியாகவேதான் இருந்தார். அதற்கான வீடியோ ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -