இந்திய இளம் நட்சத்திர பேட்டர் வைபவ் சூரியவன்ஷியின் அதிரடியான பேட்டிங் மற்றும் அவரது அபாரமான திறமை குறித்து இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் துருவ் ஜூரெல் பாராட்டி பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடர் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் இளம் வயதிலேயே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த வைபவ் சூரியவன்ஷி, தற்போது இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.
எதிரணி பவுலர்களை அச்சமின்றி எதிர்கொண்டு பவுண்டரிகளாக பறக்கவிடும் இவரது அட்டாக்கிங் பேட்டிங் ஸ்டைல், களத்தில் அவருடன் மறுமுனையில் பேட்டிங் செய்யும் சக பேட்டர்களின் அழுத்தத்தை வெகுவாக குறைக்கிறது.
இதுகுறித்து துருவ் ஜூரெல் பேசும்போது “வைபவ் சூரியவன்ஷியுடன் மற்ற வீரர்களை கம்பேர் செய்வது சரியாக இருக்காது. ஏனெனில் இந்த சிறிய வயதிலேயே அவர் செய்து காட்டும் விஷயங்களை நினைத்து கூட பார்க்க முடியாது, அவர் பேட்டிங் செய்வதை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “களத்தில் அவர் பேட்டிங் செய்வதை மிகவும் ஈசி ஆக்கி விடுகிறார். தொடர்ந்து பவுண்டரிகளை அடித்து பவுலர்களுக்கு பிரஷர் கொடுப்பதால், மறுமுனையில் இருக்கும் பேட்டருக்கு பவர்ப்ளே ஓவர்களில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ரன் உயர்த்த சுதந்திரம் கிடைக்கிறது” என்று கூறி இருக்கிறார்.