ஐபிஎல் 2025 திரும்ப தொடங்கும் போது.. தோனி கேப்டனாக இருப்பது சந்தேகம்.. காரணம் என்ன.?

0
249

ஐபிஎல் 2025 கிரிக்கெட் லீக் தொடரானது சில பாதுகாப்பு பிரச்சினைகளின் காரணமாக மீதமுள்ள போட்டிகள் பிசிசிஐயால் கைவிடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் மீதமுள்ள போட்டிகள் திரும்பவும் விளையாட துவங்கினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் எம்எஸ் தோனி திரும்பவும் கேப்டனாக இருப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன என்று பார்க்கலாம்.

- Advertisement -

கைவிடப்பட்ட ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு மெகா ஏலத்திலேயே வீரர்களை எடுக்க தவறியதால், முதல் போட்டியில் மட்டும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்தது. இந்த சூழ்நிலையில் அணியின் கேப்டன் ருத்ராஜ் கெயிக்குவாட் முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக முழு தொடரில் இருந்து வெளியேறினார்.

இந்த சூழ்நிலையில் எம்எஸ் தோனி திரும்பவும் சென்னை அணியின் கேப்டனாக பொறுப்பேற்று அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வலுவான பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டம் காரணமாக ஐபிஎல் தொடரானது தற்போது கைவிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரம் கழித்து இதற்கான முக்கிய அறிவிப்பு வெளிவரும் என பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.

- Advertisement -

எம்எஸ் தோனி இருப்பது சந்தேகம்

பிசிசிஐயின் அறிவிப்புக்கு தகுந்தவாறு ஐபிஎல் தொடர் திரும்பவும் தொடங்கினால் அதில் எம்எஸ் தோனி கேப்டனாக இருப்பது சந்தேகம். ஏனென்றால் காயம் காரணமாக தொடரின் தொடக்கத்தில் வெளியேறிய ருதுராஜ் நான்கு வாரங்கள் ஓய்வில் இருப்பார் என்பதால், மீதமுள்ள போட்டிகள் துவங்குவதற்கு முன் அவர் தயாராகி விடுவார். ஆனால் அவருக்கு பதிலாக மாற்றுவீரராக ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று கூறலாம்.

இதையும் படிங்க:ரோஹித் ஓய்வு பெற.. மோசமான பேட்டிங் காரணம் இல்லை.. அவர் இதைத்தான் ஆழமா யோசிச்சிருக்கணும் – சிறுவயது கோச் பேட்டி

ஆனால் மீதமுள்ள போட்டிகளுக்கான ஐபிஎல் தொடர் துவங்கும் போது வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த நாடுகளில் நடைபெறும் போட்டிகளுக்கு செல்வார்கள் என்பதால் மீதமுள்ள போட்டிகளில் அவர்கள் பங்கேற்பது சந்தேகம் ஆகிவிடும். இதனால் ஆயுஷ் மாத்ரேவை சிஎஸ்கே நிச்சயமாக தக்க வைத்துக் கொள்ளும். இதனால் எம்எஸ் தோனி திரும்பவும் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகி ருத்ராஜ் கேப்டனாக பொறுப்பேற்பார். இது சிஎஸ்கே ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -