ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி தேர்வு செய்த ஆல் டைம் ஒருநாள் கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பருக்கான இடத்தில் தோனியை தேர்வு செய்யவில்லை.
ஒரு தனியார் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி இடம் எல்லா காலத்திலும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்படி அவர் தேர்வு செய்த அணியில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை எழுச்சி
ஆப்கானிஸ்தான் அணி டி20 கிரிக்கெட்டில் யாரையும் எந்த இடத்திலும் வெல்லக்கூடிய அணியாக வளர்ந்து இருந்தாலும் கூட, ஓவர்கள் அதிகம் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பிக்கைக்குரிய அணியாக வளராமல் இருந்து வந்தது.
இப்படியான நிலையில் தான் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அப்போதைய நடப்பு சாம்பியன் ஆன இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை என மூன்று பெரிய நாடுகளை தோற்கடித்ததோடு, ஆஸ்திரேலியாவுக்கும் பெரிய அச்சுறுத்தலை கடைசி போட்டியில் கொடுத்திருந்தது. இந்த ஆப்கானிஸ்தான் அணியை கேப்டனாக ஹஸ்மத்துல்லா ஷாகிதி வழிநடத்தி இருந்தார்.
தோனிக்கு இடமில்லை
இந்த நிலையில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி இடம் எல்லா காலத்திலும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்ய சொல்லப்பட்டது. அவர் அந்த அணியில் விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்யாமல் பாகிஸ்தானியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப்பை தேர்வு செய்தார். மேலும் நிகழ்ச்சியின் நெறியாளர் தோனி வேண்டாமா என்று கேட்ட பொழுது, இல்லை எனக்கு வேண்டாம் என்று தெளிவாகவே கூறியிருக்கிறார்.
ஹஸ்மத்துல்லா ஷாகிதி தேர்ந்தெடுத்த ஆல் டைம் ஒருநாள் கிரிக்கெட் அணி :
சயீத் அன்வர், ரோஹித் சர்மா, விராட் கோலி, குமார் சங்கக்கார, இன்சமாம் உல் ஹக், மஹேலா ஜெயவர்த்தனே, ரஷித் லத்தீப், ஆண்ட்ரூ பிளின்டாஃப், ரஷித் கான், வக்கார் யூனிஸ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.