ரைஷிங் புனேவில் நான் ஆடியபோது.. பிளெம்மிங் மற்றும் தோனி என்னை இப்படித்தான் டீமில் வைத்திருந்தார்கள்; ஸ்மித் கேப்டனாக வந்தபோது மாறியது – தீபக் சஹர் ஓப்பனாக சொன்ன விஷயம்!

0
1230

‘ரைசிங் புனேவில் தோனியின் கீழ் நான் ஆடியபோதும் சரி, சிஎஸ்கேவில் நான் அடியபோதும் சரி.. என்னை அணியில் வைத்திருந்தது இப்படித்தான்.’ என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் தீபக் சகர்.

சிஎஸ்கே அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வரும் தீபக் சகர், தோனியின் கீழ் 2016ஆம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் இருந்தே விளையாடி வருகிறார். அதன்பிறகு தடைக்காலம் முடிந்து 2018ஆம் ஆண்டு மீண்டும் ஐபிஎல் போட்டிகளுக்குள் சிஎஸ்கே வந்தபோது, ஏலத்தில் முதல் ஆளாக தீபக் சகர் எடுக்கப்பட்டார்.

- Advertisement -

தொடர்ச்சியாக பல ஆண்டுகள் சிஎஸ்கே அணியில் பயணித்து வரும் தீபக் சகர், அப்போது ரைசிங் புனே அணியில் இருக்கும்போது தன்னை எதற்காக அணியில் எடுத்தார்கள்? எப்படி நடத்தினார்கள்? என்றும், இப்போது சிஎஸ்கே அணியில் நடத்தும் விதம் குறித்தும் வித்தியாசங்களை பகிர்ந்து கொண்டு, தோனி மற்றும் பிளெம்மிங் நடத்தும் விதத்தைப் பற்றி விரிவாக சமீபத்திய பேட்டியில் கூறினார்.

“2016ல் ரைசிங் புனே அணியில் பயிற்சிக்காக என்னை அழைத்தபோது, பிளெம்மிங் என்னுடைய பேட்டிங் வைத்துதான் அணியில் எடுத்தார். நான் பேட்டிங் செய்தபோது முதலில் தோனியை சந்தித்தேன். அன்று நான் 5 சிக்ஸர்கள் வரிசையாக அடித்தேன். பிளெம்மிங் நான் நன்றாக பேட்டிங் செய்ததாக பாராட்டினார்.

பின்னர் ஒருநாள் தோனியுடன் சேர்ந்து பயிற்சி பேட்டிங் செய்தபோது, ரன் எடுக்க ஓடுகையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு என்னால் சில போட்டிகள் விளையாட முடியாமல் போனது. அணியில் ரஜத் பாட்டியா எனது இடத்தில் விளையாட வைக்கப்பட்டார். பின்னர் நான் உடல் தகுதியை பெற்றபோதும் ஆங்காங்கே ஓரிரு போட்டிகள் கிடைத்தது. அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

2017 ஆம் ஆண்டு ஸ்மித் கேப்டன் ஆக்கப்பட்டார். அப்போது அணியில் 12வது வீரராக தொடர்ந்து இருந்தேன். ‘வாய்ப்புகள் கிடைக்கலாம். தயாராக இரு!” என்று ஸ்மித் ஒவ்வொரு போட்டிக்கு முன்னரும் கூறுவார்₹ ஆனால் ஒரு போட்டியிலும் விளையாட வைக்கப்படவில்லை.”

“அடுத்த வருடம் சிஎஸ்கே அணி மீண்டும் ஐபிஎல்-க்கு வந்தது என்னை ஆக்சனில் எடுத்தார்கள். இங்கேயும் விளையாடவைக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தபோது, வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தது. பிளம்மிங் தோனியிடம் சென்று, ‘என்னை பிளேயிங் லெவனில் சில போட்டிகள் ஆடவைக்கலாம்.’ என்று பரிந்துரைத்ததாகவும், அதற்கு தோனி, ‘இவர் 14 போட்டிகளிலும் ஆடுகிறார். அடுத்த பிளானை சொல்லுங்கள்.’ என்று கூறியதாகவும், சில வருடங்கள் கழித்து காசி விசுவநாதன் சார் என்னிடம் சொன்னார்.”

“பின்னர், ஒவ்வொரு முறை அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து பேப்பரில் எழுதும் பொழுதும் என்னுடைய பெயர் முதலாவதாக எழுதப்படும் என்றும் காசி விசுவநாதன் சார் கூறியது பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. அதிலிருந்து ரைசிங் புனே அணியில் இருக்கும் பொழுது என்னை நடத்திய விதமும், சிஎஸ்கே அணியில் என்னை நடத்தும் விதமும் எப்படி இருக்கிறது என்று என்னால் உணர முடிந்தது.”

“சிஎஸ்கே அணி வெற்றிகரமாக இருப்பதற்கு காரணம், அவர்கள் ஒவ்வொரு சீசனிலும் அணியின் வீரர்களை நடத்தும் விதமும் அவர்களுக்கு கொடுக்கும் நம்பிக்கையும் தான்.” என்று பேட்டியை முடித்தார் தீபக் சகர்.