“பதவியால் மரியாதை வராது.. வீரர்கள் கேப்டனை மதிக்க இதை செய்யனும்” – தோனி கேப்டன்சி மந்திரம்

0
192
Dhoni

இந்திய கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனி பெற்றிருக்கும் இடத்தை யாராலும் அபகரிக்க முடியாது. ஏனென்றால் அது விளையாட்டு திறமையை தாண்டி, மனிதர்களைப் பற்றிய புரிதலை கொண்ட அபூர்வ திறமையின் கலவை.

உதாரணமாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாங்கப்படும் வீரர்கள் யாராக இருந்தாலும் சிறப்பாக விளையாடுவதும், அதே வீரர்கள் வேறு அணிக்கு செல்லும் பொழுது செயல்பாடு மந்தமாக அமைவதும் நாம் பார்த்து வருவதே.

- Advertisement -

மேலும் சர்வதேச கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் இந்திய அணியில் வெற்றிகரமான சுழற் பந்துவீச்சு ஜோடியாக இருந்த சாகல் மற்றும் குல்தீப் இருவரும் மகேந்திர சிங் தோனி இந்திய அணியில் இருந்து நகர்ந்த பிறகு பந்துவீச்சில் தடுமாறியதை பார்க்கலாம். அவர்களே இதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு கேப்டனாக வீரர்களை வழி நடத்தி, அவர்களின் பலம் மற்றும் பலவீனத்தை அவர்களுக்கு மிகச் சரியான முறையில் புரிய வைத்து, வெற்றியுடன் கேப்டனுக்கான நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்றுக் கொள்வதில் மகேந்திர சிங் தோனி ஒரு மிகச் சிறந்த கலைஞராக இருந்திருக்கிறார்.

ஒரு கேப்டன் வீரர்களின் நம்பிக்கையையும் மரியாதையும் பெறுவது எப்படி? என்று தோனி கூறியது “விசுவாசத்திற்கும் மரியாதைக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. உங்கள் அணியின் ஊழியர்கள் மற்றும் வீரர்கள் உங்களை மதிக்காவிட்டால் நீங்கள் அவர்களிடமிருந்து விசுவாசத்தை பெறுவது மிகவும் கடினம். இங்கு நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்ன பேசுகிறீர்கள்? என்பது முக்கியமல்ல. நீங்கள் சில நேரங்களில் பேசாமல் கூட இருக்கலாம். ஆனால் உங்கள் நடத்தைதான் மரியாதையை பெற்றுத் தரும்.

- Advertisement -

ஒரு கேப்டனாக மரியாதையை சம்பாதிப்பது மிகவும் முக்கியம் என நான் உணர்ந்தேன். அது பொறுப்பின் நாற்காலி உடன் சேர்ந்து வராது. அது நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தால் வருகிறது. மனிதர்கள் சில நேரங்களில் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கிறார்கள். அணி நிர்வாகம் உங்களை நம்பினால் கூட நீங்கள் உங்களை நம்பாத முதல் நபராக இருப்பீர்கள்.

மரியாதையை கட்டாயப்படுத்தி வாங்க முடியாது. அதை சரியான முறையில் செயல்பட்டு சம்பாதிக்க வேண்டும். ஏனென்றால் அது இயற்கையானது. உங்களுக்கு அந்த விசுவாசம் கிடைத்தவுடன் உங்களின் செயல் திறனும் கூடும்.

சில வீரர்கள் அழுத்தத்தை விரும்புகிறார்கள் சில வீரர்கள் விரும்புவது கிடையாது. எனவே தனிநபரின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வது அவசியம். நீங்கள் இதை புரிந்து கொண்டதும் ஒரு வீரரின் பலவீனத்தில் வேலை செய்ய ஆரம்பிப்பீர்கள். எது பலவீனம் என்று அவருக்குச் சொல்வீர்கள்.

இதையும் படிங்க : 55-5 to 297-5.. இலங்கைக்கு பயம் காட்டிய ஆப்கன்.. உலக சாதனை படைத்த நபி-ஓமர் சாய் ஜோடி

இது ஒரு தனி வீரரை தன்னைக் குறித்து சந்தேகிக்காமலும் நம்பிக்கை உடனும் வைத்திருக்க உதவுகிறது. அடுத்து அவர்களுடைய மாற்றங்கள் எப்படி வேலை செய்கிறது என்பதை பார்க்க விரும்புகிறார்கள். ஒரு வீரருக்கு சரியாக இருக்கும் என்று கண்டுபிடிப்பது ஒரு கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் வேலை” என்று கூறி இருக்கிறார்.