“தோனி கோலி காலம் முடிந்தது.. இனி இந்த வீரரின் காலம்தான்!” – இந்திய முன்னாள் சூப்பர் ஸ்டார் வீரர் கருத்து!

0
1017
Virat

இந்தியாவில் துவங்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ரோகித், சர்மா, விராட் கோலி, டேவிட் வார்னர், ஸ்மித், ரூட் என மூத்த பெரிய வீரர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இவர்கள் இதுவரையில் பெரிய தொடர்களில் செயல்பட்ட விதம், ரசிகர்களை பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதே சமயத்தில் இவர்களும் பெரிய தொடர்கள் வரும்பொழுது திடீரென சிறப்பாக விளையாட ஆரம்பிக்கிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இவர்களுக்கு அடுத்த தலைமுறைகளில் வருகின்ற பாபர் அசாம் போன்ற வீரர்களின் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகி இருக்கிறது. இதனால் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் சுவாரசியமான ஒன்றாக மாறுகிறது!

இந்த வகையில் இந்திய கிரிக்கெட்டுக்கு இளம் வீரராக உள்ளே வந்து தற்பொழுது உச்சகட்ட பேட்டிங் ஃபார்மில் இருக்கும் சுக்குமன் கில் மீதும் ரசிகர்கள் தாண்டி நிறைய மூத்த வீரர்களும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டு அவருக்கு தன்னுடைய கிரிக்கெட்டில் மிகவும் பொற்காலமான ஒரு ஆண்டாக அமைந்திருக்கிறது. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய மண்ணில் சதம் அடித்திருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் வந்திருக்கிறது. மேலும் ஐபிஎல் தொடரிலும் மூன்று சதங்கள் அடித்தார்.

- Advertisement -

இந்த நிலையில் சக பஞ்சாப் வீரரான முன்னாள் இந்திய சூப்பர் ஸ்டார் யுவராஜ் சிங் பற்றி கூறும் பொழுது “கில் இந்த தலைமுறையில் மிகச் சிறந்த வீரராக வருவதற்கான திறமையை கொண்டவர். அவர் மிக கடினமாக உழைக்கக் கூடியவர். 19, 20 வயதிலேயே அவருடைய அணுகுமுறை அப்படித்தான்.

சாதாரண இளம் வீரர்களை விட அவர் நான்கு மடங்கு மிக கடினமாக உழைப்பார். அவரால் இந்த தசாப்தத்தில் மிகச் சிறந்த வீரராக இருக்க முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

அவர் அச்சமற்ற நிலையில் விளையாடுகிறார். உலகக் கோப்பையில் அவர் ஒரு கேம் சேஞ்சராக இருக்க முடியும். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் ஓபனராக பந்துவீச்சாளர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்.

மேலும் அவர் ஆஸ்திரேலியாவில் காபா டெஸ்டில் இந்தியா வென்ற பொழுது 91 ரன்கள் எடுத்தார். மேலும் தனது முதல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இரண்டு முக்கிய அரை சதங்கள் அடித்தார். வேறு யாரும் இதை செய்தார்களா? என்று தெரியவில்லை. அவர் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் ரன்கள் எடுப்பார் என்று நான் நம்புகிறேன்!” என்று கூறியுள்ளார்!