பெஸ்ட் கேப்டன்னா அது தோனிதான் ; இனிமே அவர மாதிரி யாரும் வரவும் முடியாது – சுனில் கவாஸ்கர்!

0
566
Dhoni

ஐபிஎல் தொடரில் நேற்று ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு சென்னை அணிகள் மோதிக்கொண்ட போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக இருந்த இந்தப் போட்டியில் சென்னை அணி இறுதியில் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு கான்வே 83, சிவம் துபே 52 ரன்கள் எடுக்க சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 226 ரன்களை ஆறு விக்கட்டுகள் இழப்புக்கு குவித்தது!

- Advertisement -

இதற்கு அடுத்து சாதனை ஐபிஎல் இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூர் அணிக்கு கேப்டன் பாப் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் 126 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இருவரும் முறையே 62, 76 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறும் தொலைவில் கொண்டு வந்து வைத்தார்கள்.

கடைசி ஆறு ஓவர்களுக்கு 68 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், பின் வரிசையில் வந்த ஷாபாஷ் அகமத் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் அதைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. பெங்களூர் அணி நேற்று தோல்வி அடைந்ததோடு ஒரு சாதனை வெற்றியையும் பெற தவறிவிட்டது.

இந்தப் போட்டியில் சென்னை அணி வீரர்கள் நிறைய கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தார்கள். மொயின் அலி அசட்டையாக ஃபீல்டிங்கில் இருந்து எளிமையான ஒரு ரன் அவுட் வாய்ப்பை வீணடித்தார். நிறைய தவறுகள் நடைபெற்ற இருந்தாலும் சென்னை அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இது குறித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் ” மகேந்திர சிங் தோனி அணியை வழிநடத்தும் போது வீரர்கள் அதிக அழுத்தத்தை உணர மாட்டார்கள். அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார். அவரை இந்த மாதிரியான இடத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லவே முடியாது.அவர்கள் கேட்ச் வாய்ப்புகளை கைவிட்டாலோ, ஃபீல்டிங்கை தவறவிட்டாலோ அவர்களுக்கு தோனி மறு வாய்ப்புகளை வழங்குகிறார். அவர்களை தோனி ஒருபொழுதும் அழுத்தத்திற்குள் கொண்டு வருவதில்லை. இதனால்தான் சிஎஸ்கே அணி நெருக்கடியான நிலைகளை சமாளித்து வெற்றி பெறுகிற அணியாக இருக்கிறது. தோனி மிகச் சிறந்த கேப்டன். அவரை மாதிரி இன்னொரு கேப்டன் வருவதும் கஷ்டம் என்று கூறி இருக்கிறார்!

நேற்று சென்னை அணிக்கு ரன்கள் குவித்த கான்வே பற்றி இர்பான் பதான் கூறுகையில் ” கான்வேயின் பேட்டிங் ஸ்டைல் மைக்கேல் ஹஸ்சியை ஒத்து இருக்கிறது. அவர் ரன்கள் அடிப்பதை ஆரம்பித்தால் நிறுத்த மாட்டார். பெங்களூரு கேப்டன் பீல்டிங் பொசிஷன்களை மாற்றினாலும், அதற்கு ஏற்றபடி கேப் கண்டுபிடித்து கான்வே சிறப்பாக விளையாடினார்!” என்று கூறியுள்ளார்!