பிரபலமான எல்லாரும் தனித்தனியா டீமா இருக்கும்போது தோனி வந்து செமையான ஒரு சம்பவத்தை பண்ணினார் – தீபக் சகர் வெளியிட்ட பக்கா நியூஸ்!

0
4357
Deepak

நடப்பு ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பத்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தி இருக்கிறது!

நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் 16ஆவது சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோத இருக்கிறது!

- Advertisement -

கடந்த வருடம் மெகா ஏலத்துடன் நடைபெற்ற ஐபிஎல் 15 வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வரலாற்றில் மிக மோசமான செயல்பாட்டை பதிவு செய்தது. புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தையே நான்கு வெற்றிகள் உடன் பிடித்தது

இந்த வருடம் மினி ஏலத்தில் பிராவோ உத்தப்பா மாதிரியான வீரர்களைக் கழட்டி விட்டு, இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்டோக்சை வாங்கி அணியைப் பலப்படுத்தியது. மேலும் பதிரனாவைத் தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இப்படியான மாற்றங்களாலும் காயத்தில் இருந்து தீபக்,சகர் திரும்பி வந்ததாலும், மகேந்திர சிங் தோனி முழு நேர கேப்டனாக பொறுப்பேற்றதாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வழமையான சிறப்பான செயல்பாட்டுக்கு திரும்பியது.

- Advertisement -

தீபக் சகர் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தோனி பற்றி பேசுகையில் ” நான் சிஎஸ்கே அணிக்கு வந்த பொழுது, ஒரு இரவு உணவு நேரத்தில் பார்த்தேன். அப்பொழுது வெளிநாட்டு வீரர்கள் ஒரு குழுவாகவும், இந்திய மூத்த வீரர்கள் ஒரு குழுவாகவும், இளைய வீரர்கள் ஒரு குழுவாகவும் அமர்ந்திருந்தனர். அப்போது வந்த மகி பாய் நேராக இளைய வீரர்கள் இருந்த குழுவோடு சேர்ந்து அமர்ந்து கொண்டார்.

சிஎஸ்கே அணியில் யாருக்கும் எந்த அழுத்தமும் கிடையாது. சூழ்நிலை எப்பொழுதும் நன்றாகவும் நிதானமாகவும் இருக்கிறது. இதற்குப் பெரிய காரணம் மகி பாய்தான். எங்களிடம் கூட மோசமான சீசன் இருந்தது. ஆனால் சூழ்நிலை எப்பொழுதும் நன்றாகவும் நேர்மறையாகவும்தான் இருந்தது!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -