ஐபிஎல் 2025

டிவிலியர்ஸ் எனக்கு உதவி செஞ்சிருக்கார்.. ஆனா நான் இருக்க விரும்புறது வேற மாதிரி – டிவால்ட் பிரிவிஸ் பேச்சு

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் அணிக்கு எதிராக அதிரடியாக அரை சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்த டிவால்ட் பிரவிஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார். மேலும் அவர் தன்னுடைய பேட்டிங் குறித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் மற்றும் சிஎஸ்கே அணிகள் நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களுடைய கடைசி லீக் போட்டியில் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது.

கலக்கிய குட்டி ஏபிடி

இன்று ஆயுஸ் மத்ரே மற்றும் கான்வே இருவரும் தொடக்க வீரர்களாக வந்து சிஎஸ்கே அணிக்கு சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்கள். மூன்றாவது இடத்தில் வந்த உருவில் படேலும் தன் பங்குக்கு 19 பந்தில் 37 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இந்த முறை பவர் பிளேவில் சிஎஸ்கே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்தது.

இதைத்தொடர்ந்து ஐந்தாவது வீரராக 10 ஓவர்கள் தாண்டி களம் இறங்கிய டிவால்ட் பிரிவிஸ் தன்னுடைய பாணியில் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 57 ரன்கள் அடித்தார். இவருடைய அதிரடியின் காரணமாக சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. இயற்கை நோக்கி விளையாடிய குஜராத் 147 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. சிஎஸ்கே அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

- Advertisement -

நான் இப்படிதான் இருக்க விரும்பறேன்

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற டிவால்ட் பிரிவிஸ் பேசும் பொழுது “இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் வெளியே சென்று வேடிக்கை பார்த்து விளையாட்டை மிகவும் ரசித்து விளையாடுகிறேன். நான் சிறுவயதிலிருந்தே விளையாட்டை ரசித்து விளையாட வேண்டும் என்று நினைப்பவன். இங்கு எல்லாமே சரியாகவே இருக்கிறது எதுவும் பிரச்சனை இல்லை என நான் எனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தேன்”

இதையும் படிங்க : சரியா ஆடலனு ஓய்வு பெறனும்னா 22 வயசுலயே போகணும்.. இனி ருதுராஜ் அதுக்கு கவலைப்பட வேண்டாம் – தோனி பேச்சு

“நான் சிறப்பாக விளையாடுகிறேன். கடந்த ஒட்டுமொத்த விஷயத்திற்கும் நான் நன்றி உள்ளவனாக இருக்க விரும்புகிறேன். நான் எப்படி விளையாட வேண்டும் என்று எல்லோரும் சொன்னார்களோ அது இப்படியானதுதான். ஏபி டிவில்லியர்ஸ் நான் மிகவும் மதிக்கும் நபர்களில் ஒருவர். அவர் என்னுடைய விளையாட்டை மேம்படுத்த உதவி இருக்கிறார். என்னை அவருடன் ஒப்பிடுவது எனக்கு கௌரவமானது. ஆனால் நான் என்னுடைய இயல்பில் சொந்த வழியிலேயே விளையாட விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by