உலக கிரிக்கெட்

ரிட்டையர்டு ஆயிட்ட ஆளுங்க சொல்றத பத்தி கவலைப்பட மாட்டேன்.. கிப்ஸ் கருத்துக்கு பிரவீஸ் பதிலடி

தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் கிப்ஸ் தன்னை பற்றி விமர்சனம் செய்ததற்கு டிவால்ட் பிரிவிஸ் கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் அதிரடியாக விளையாட முயற்சி செய்து தொடர்ச்சியாக டிவால்ட் பிரிவிஸ் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து கொண்டு இருந்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் கிப்ஸ் விமர்சனம் செய்திருந்தார்.

கொடுக்கப்பட்ட முன்னுரிமை

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் எதிர்காலத்திற்கான வீரர் என்று ஸ்டப்ஸ் பார்க்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென டி20 உலக கோப்பை தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து நீக்கப்பட்டார். அவருடைய இடத்திற்கு டிவால்ட் பிரிவிஸ் சேர்க்கப்பட்டார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

அதே சமயத்தில் டிவால்ட் பிரிவிஸ் தனிப்பட்ட வீரராக சிறப்பாக விளையாடி இதுவரையில் எந்த ஒரு போட்டியையும் வென்று கொடுக்கவில்லை. அவருக்கு இந்திய சுற்றுப்பயணமும் சுமாராகவே அமைந்தது. குறிப்பாக டி20 தொடரில் அவர் மோசமாகவே விளையாடியிருந்தார்.

- Advertisement -

கொடுக்கப்பட்ட பதிலடி

இதுகுறித்து டிவால்ட் பிரிவிஸ் கூறும் பொழுது ” என் மீது ஒரு விமர்சனங்கள் குறித்து எனக்கு கவலை இல்லை. அந்த விமர்சனங்களை கூறக்கூடிய முன்னாள் வீரர்கள் தற்போது கிரிக்கெட் விளையாடவே இல்லை. இது என்னிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நான் ஆட்டத்தை ரசித்து விளையாடிக் கொண்டிருக்கிறேன். நான் அடிக்க வேண்டிய பந்தை அடிக்கிறேன். இங்கு விளையாடினாலும் வெளியில் விளையாடினாலும் எப்பொழுதும் விமர்சனங்கள் இருக்கும்”

இதையும் படிங்க : முதல் ODI.. இந்திய அணிக்கு பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறை.. கேப்டன் கில் புது முடிவு.. ஜெயிக்க முடியுமா?

“அது உலகக் கோப்பையாய் இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும், அது ஒரு போட்டிதான்; பந்து அதே பந்து தான். நான் எப்போதும் விளையாடுவது போலவே விளையாடுவேன். நான் ரசித்துக்கொண்டே விளையாடுவேன்..
வெளியில் இருந்து வரும் சத்தங்கள் குறித்து எனக்கு கவலை இல்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by