“நான் பேட்டிங் பண்ண உள்ள போனப்ப.. டிராவிட் சார் ஒன்னு சொன்னார்.. அதுதான் உதவுச்சி” – தேவ்தத் படிக்கல் பேட்டி

0
326
Padikkal

மார்ச் 8. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் தரப்பில் இதுவரையில் ஐந்து வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ஐந்தாவது போட்டியில் ஐந்தாவது வீரராக இளம் இடதுகை பேட்ஸ்மேன் கர்நாடகாவை சேர்ந்த தேவ்தத் படிக்கல் அறிமுகமானார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு கிரிக்கெட்டில் பிரகாசித்து, ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி சதம் அடித்த பொழுதே, இவருக்கு இந்திய அணியில் பிரகாசமான இடம் இருக்கிறது என்று கூறப்பட்டது.

- Advertisement -

இதற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்று மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் சிக்கி உடல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்ப வந்து சதங்களாக குவித்தார். இதன் காரணமாக இந்திய அணிக்கு தேர்வாகி, இன்று அறிமுக வாய்ப்பையும் பெற்று அரை சதம் அடித்து அசத்தியிருக்கிறார். தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் 103 பந்துகள் எதிர் கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 62 ரன்கள் எடுத்த அவர், முதல் போட்டியில் பேட்டிங் செய்வது எப்படி இருந்தது எனக் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து தேவ்தத் படிக்கல் பேசும் பொழுது ” நான் என்னை விளையாடுவதற்கு தயாராக வைத்துக் கொள்ள விரும்பினேன். நான் இந்த போட்டியில் அறிமுகமாவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஒருநாள் முன்னதாகக் கூறப்பட்டது. இங்கு வாய்ப்புகள் வருவது அரிது. எனவே இதற்கு நான் என்னை தயாராக வைத்துக் கொண்டேன்.

முதலில் உள்ளே செல்லும் பொழுது கொஞ்சம் பதட்டமாக இருந்தது. ஆனால் நான் அதை பாசிட்டிவான வழியில் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். மேலும் ஆரம்பத்தில் பேட்டிங் செய்யும்பொழுது கொஞ்சம் சவாலாகவே இருந்தது. ஆனால் நான் அமைதியாக சப்ராஸ்கான் உடன் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப் அமைக்க விரும்பினேன்.

- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியின் தொப்பியை பெறுவது என்பது ஒரு சிறந்த உணர்வு. தொடக்கத்தில் நான் பேட்டிங் செய்யும்பொழுது கொஞ்சம் உத்தேசமாகத்தான் விளையாடினேன். பிறகு எனக்கு ஆடுகளம் பழகிவிட்டது. அந்த நேரத்தில் பந்து வீசிய ஆண்டர்சன் மற்றும் ஸ்டோக்ஸ் போன்ற பெரிய பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடுவது சவாலாகத்தான் இருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் எனக்கு உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் மிகவும் சவாலாக இருந்தன. நீங்கள் வீட்டில் உட்கார்ந்து எதுவும் செய்யாமல் இருக்கும் பொழுது அது உங்களுக்கு இனிமையான உணர்வாக இருக்காது. எனக்கு மீண்டும் எப்பொழுது வாய்ப்புகள் கிடைக்குமோ அதை நான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவே நினைத்தேன்.

இதையும் படிங்க : “என் ப்ளானே அந்த இங்கிலாந்து பிளேயரை விடக்கூடாதுனுதான்.. அவர் பேசட்டும்” – சுப்மன் கில் பேட்டி

இந்திய அணியில் பழகிய முகங்களாக இருந்தது உதவி செய்தது. நான் பேட்டிங் செய்ய சென்ற பொழுது ராகுல் டிராவிட் சார் ‘முதல் 10, 15 நிமிடங்கள் கொஞ்சம் பதற்றமாக இருக்கும். பிறகு பேட்டிங் செய்வதை என்ஜாய் செய்யுங்கள்’ என்று கூறி அனுப்பினார். எனக்கு களத்தில் அது மிகவும் உதவியாக இருந்தது. கடைசி செசனில் நான் இன்னும் கொஞ்சம் நன்றாக விளையாடியிருக்கலாம். எங்களிடம் உலகத்தரமான மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் நாளை ஆட்டத்தில் தாக்கத்தை உண்டாக்குவார்கள்” என்று கூறி இருக்கிறார்.