இந்திய கிரிக்கெட்

கேகேஆர் கையில் 63.30 கோடி.. ஆர்சிபி அட்டகாசமான ரிலீஸ்.. 2 அணிகள் கழட்டிவிட்ட வீரர்கள் விபரம்

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடக்க இருக்கும் ஐபிஎல் மினி ஏலத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் கழட்டி விட்டுள்ள வீரர்கள் குறித்த விபரங்களை பார்க்கலாம்.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளுமே எந்த டிரேடிங்கிலும் ஈடுபடவில்லை. இதில் ஆர்சிபி அணி மிகவும் செட்டில் ஆன அணியாக இருக்கிறது. அதே சமயத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மினி ஏலத்தை நம்பி வருகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு துவக்க இடத்தில் விளையாடும் இந்திய விக்கெட் கீப்பர் தேவையாக இருந்தது. இதற்காக சஞ்சு சாம்சன் மற்றும் கேஎல்.ராகுல் ஆகியோரை டிரேடிங் செய்வதற்கு பெரிய அளவில் முயற்சி அது நடக்கவில்லை. இதனால் முக்கியமான ஐந்து வீரர்களை கழட்டி விட்டு 63.30 கோடி கையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வைத்திருக்கிறது.

கேகேஆர் கழட்டிவிட்ட வீரர்கள்: வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரசல், மொயின் அலி, அன்றிச் நோர்க்கியா மற்றும் குயின்டன் டி காக். இந்த ஐந்து வீரர்கள் மூலமாக இந்த அணிக்கு மொத்தம் 63.30 கோடி ரூபாய் கையில் கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி அணி ஏற்கனவே செட்டில் ஆன சிறப்பான அணியாக இருக்கிறது. இருந்த போதும் இரண்டு முக்கியமான வெளிநாட்டு வீரர்களுடன் மொத்தம் எட்டு வீரர்களை கழட்டி விட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : சிஎஸ்கே 11 வீரர்கள்.. மும்பை 9 வீரர்கள்.. இரண்டு அணியும் கழட்டிவிட்ட வீரர்களின் மொத்த விபரம் – ஐபிஎல் 2026

ஆர்சிபி கழட்டிவிட்ட வீரர்கள்: லியாம் லிவிங்ஸ்டன், லுங்கி நெகிடி, டிம் செப்பர்ட், முசரபாணி, ஸ்வஸ்திக் சிகாரா, மனோஜ் பாண்டேஜ், மயங்க் அகர்வால் மற்றும் மோகித் ரத்தி.

- Advertisement -
Published by
Tags: KKRRCB