“ஜெய்ஸ்வால் சேவாக் மட்டுமல்ல.. இவர் மாதிரியும்தான்” – பாகிஸ்தான் டேனிஸ் கனேரியா பேச்சு

0
162
Jaiswal

இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால உச்ச நட்சத்திரமாக ஆரம்பத்தில் பிரித்திவி ஷா பார்க்கப்பட்டார். இதற்கு அடுத்து இளம் வீரர் சுப்மன் கில் பார்க்கப்பட்டார்.

ஆனால் விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியின் உச்ச நட்சத்திர வீரராக, தற்போது இந்திய அணிக்கு டெஸ்ட் மற்றும் டி20 வடிவத்தில் துவக்க ஆட்டக்காரராக விளையாடும் ஜெய்ஸ்வால் பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் அவர் கில்லை விட மிக வேகமாக முன்னேறி வருகிறார் என்பதை உண்மை. கில்லுக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நல்ல புள்ளி விவரங்கள் இருக்கிறது. ஆனால் மற்ற இரண்டு வடிவங்களிலும் பெரிதான செயல்பாடுகள் இல்லை. சில ஆட்டங்கள் தொடர்ந்து சொதப்பினால் வெளியே செல்வதற்கு கூட வாய்ப்புகள் இருக்கிறது.

ஆனால் ஜெய்ஸ்வாலின் புள்ளி விபரங்கள் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. புள்ளி விபரங்களை தாண்டி ஜெய்ஸ்வால் போட்டியில் ஆதிக்கம் மற்றும் தாக்கத்தை செலுத்தக்கூடிய வீரராக இருக்கிறார். தனி ஒருவராக எதிரணியின் நம்பிக்கையை உடைக்க முடிந்த வீரராக இருக்கிறார்.

இதன் காரணமாகவும், சூழ்நிலைக்கு தகுந்தபடி திடீரென மாறிக்கொள்ளும் அவருடைய புத்திசாலித்தனத்தாலும், இந்திய அணிக்கு உச்ச நட்சத்திரமாக ஒரு இடது கை பேட்ஸ்மேன் முதல் முறையாக வர இருக்கிறார் என்பதே பலரது கருத்தாக இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஸ் கனேரியா கூறும்பொழுது ” ஜெய்ஸ்வால் சேவாக் மற்றும் கங்குலியின் கலவை. அவரை இடது கை சேவாக் என்றும் கூறலாம். ஜேம்ஸ் ஆண்டர்சன் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவர். அவர் ஜெயஸ்வாலுக்கு ஒரு திட்டத்தை தீட்டினார். ஆனால் அந்த இளம் வீரர் அதை புரிந்து கொண்டு அந்தத் திட்டத்தை உடைத்துப் போட்டு விட்டார்.

இதையும் படிங்க : அருகில் ஐபிஎல்.. சிவம் துபே காயம்.. சர்ப்ராஸ் கான் தம்பி முசிர் கானுக்கு வாய்ப்பு.. வெளியான தகவல்கள்

சர்பராஸ் கான் நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட்டின் கதவுகளை தட்டிக் கொண்டு இருந்தார். இறுதியாக அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததும், அவர் தன்னுடைய முத்திரையை குத்தி இருக்கிறார். அவர் வழக்கமாக விளையாடும் விளையாட்டை காட்டினார். இதுவும் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று. அவரும் புத்திசாலித்தனமாகவே விளையாடினார்” எனக் கூறியிருக்கிறார்.