ஐபிஎல் 2024

4,4,6,4,4,4.. பொளந்து கட்டிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.. பிரமித்து போய் நின்ற ரிஷப் பண்ட்.. டெல்லி காட்டடி

இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டெல்லி அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. டெல்லி அணிக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜாக் பிரேசர் அதிரடியாக விளையாடி மிகப்பெரிய துவக்கத்தை கொடுத்தார்.

வெறும் 27 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்தார். மேலும் 7.2 ஓவர்களில் டெல்லி அணி 114 ரன்கள் எடுக்கவும் அவரது அதிரடி பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்திருந்தது. எனவே இதற்கு அடுத்து வந்த டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு பெரிய ரன் அழுத்தம் இல்லை.

இந்த நிலையில் அபிஷேக் போரல் 37(27), ஷாய் ஹோப் 41(17), ரிஷப் பண்ட் 29(19), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48(25), அக்சர் படேல் 11(6) ரன்கள் எடுக்க, டெல்லி அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் பும்ரா மட்டுமே சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களுக்கு 35 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இந்தப் போட்டியில் மும்பை அணிக்காக விளையாடும் இங்கிலாந்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் லூக் வுட் வீசிய ஆட்டத்தின் பதினெட்டாவது ஓவரில் டிரிஸ்டின் ஸ்டாப்ஸ் பின்புறமாக தொடர்ந்து 4,4,6,4 என அடித்தார். இதற்கு அடுத்து அதே ஓவரின் மீது இரண்டு பந்துகளை மிட் விக்கெட் திசையில் 4,4 என அடித்தார்.

இதையும் படிங்க : 27 பந்து 84 ரன்.. ஐபிஎல் டெல்லி வரலாற்றில் ஜாக் பிரேசர் மெக்கர்க் மகத்தான 2 சாதனை.. அசுரத்தனமான பேட்டிங்

இந்த ஒரே ஓவரில் மட்டும் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் அவர் 26 ரன்கள் குவித்தார். இதில் ஒரு யார்க்கர் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடி தேர்ட் மேன் திசையில் சிக்ஸர் அடித்து பிரமிப்பை உண்டாக்கினார். இதைப் பார்த்த ரிஷப் பண்ட் ஆச்சரியப்பட்டு, அவரை களத்திலேயே பாராட்டினார். இறுதிக்கட்டத்தில் இவரது அதிரடியால் டெல்லி அணி 250 ரன்கள் தாண்டி குவித்தது.

Published by