ஐபிஎல் 2025

நடராஜனை ஐபிஎல் தொடரில் ஆட வைக்காத காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த ஹேமங் பதானி – நடந்தது என்ன?

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணியில் நடராஜனை ஏன் விளையாட வைக்கவில்லை என தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி உண்மையை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் 8 போட்டிகளில் ஆறு போட்டிகளை வென்று அபாரமாக ஆரம்பித்தது. அந்த அணி மிக எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதோடு, புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பரிதாபமாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் இரண்டாவது பாதியில் மோசமாக விளையாடி வெளியேறியது.

11 கோடி நடராஜன்

இந்த முறை டெல்லி கேப்பிட்டல் அணிக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு தமிழகத்தின் ஹேமங் பதானி தலைமைப் பயிற்சியாளராக கொண்டுவரப்பட்டார். அவர் ஏலத்தில் கடுமையாக மோதி தமிழகத்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டி நடராஜனை 11 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்.

மேலும் அந்த அணியில் ஸ்டார்க், முகேஷ் குமார் மற்றும் மோகித் சர்மா என திறமையான வேத பந்துவீச்சாளர்கள் கூட்டணி இருந்த காரணத்தினால், மேலும் சுழல் பந்துவீச்சாளர்களாக கேப்டன் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் இருந்ததால் டெல்லி பவுலிங் யூனிட் மிகவும் வலிமையாக தெரிந்தது. ஆனால் நடராஜன் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டார். அந்தப் போட்டியிலும் அவர் மூன்று ஓவர்கள் பந்துவீசி 49 ரன்கள் விட்டுத் தந்தார்.

- Advertisement -

ஆடாத காரணம் என்ன?

டெல்லி அணியின் போட்டிக்கு முந்தைய நாளில் பயிற்சியில் ஈடுபடும் நடராஜன் அடுத்த நாள் போட்டியின் போது அணியில் இடம்பெறாதது வாடிக்கையாக இருந்து வந்தது. இதனால் நடராஜன் ஏன் விளையாட வைக்கப்படவில்லை என்கின்ற கேள்வி ரசிகர்களுக்கு இருந்தது. தற்போது டிஎன்பிஎல் தொடரில் இதற்கான பதிலை பயிற்சியாளர் ஹேமங் பதானி கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : 59 பந்து.. குஜராத் டு இங்கிலாந்து.. பொளந்து கட்டிய பட்லர்.. வெஸ்ட் இண்டீஸ் போராடி தோல்வி

இதுகுறித்து ஹேமங் பதானி பேசும் பொழுது “நான் ஏன் ஒரு வீரருக்கு 11 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கி விளையாட வைக்காமல் வெளியில் உட்கார வைக்கப் போகிறேன்? மிடில் மற்றும் இறுதி கட்ட ஓவர்களுக்கு வேண்டுமென்று தான் அவரை அவ்வளவு தொகை கொடுத்து வாங்கினோம். ஆனால் நடராஜன் காயத்திலிருந்து திரும்பி வந்து முழுமையாக உடல் தகுதியுடன் தயாராகவில்லை. அவர் துரதிஷ்டவசமாக தொடர்பு முழுவதும் காயத்துடன் தான் இருந்தார் அதனால்தான் விளையாட வைக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by