இன்று ஐபிஎல் தொடரில் பகலில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா விளையாடாததால் கேப்டன் பொறுப்பு சூரியகுமார் யாதவுக்கு கொடுக்கப்பட்டது. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ரியான் ரிக்கல்ட்டன் 11 பந்துகளில் 9 ரன்கள், ரோகித் சர்மா 26 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து வந்த திலக் வர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து கேப்டன் சூர்யா குமார் யாதவ் போராடி அரை சதம் அடித்து 36 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 51 ரன்கள் எடுத்தார். இறுதியில் நமன் திர் 21 பந்துகளில் 28 ரன், மிட்சல் சான்ட்னர் 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் முகேஷ் குமார் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் கேஎல்.ராகுல் 3 பந்துகளில் 1 ரன், பதும் நிஷாங்கா 30 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து வந்த நிதிஷ் ரானா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து ஒரு முனையில் நிலைத்து நின்று அதிரடி காட்டிய சமீர் ரிஸ்லி 51 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்களுடன் 90 ரன்கள் குவித்தார். இதைத் தொடர்ந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆறு விக்கெட் இழப்புக்கு அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க : ருதுராஜுக்கு கேப்டன்சி பண்ணவே தெரியல.. அந்த இடத்தில அவர் சும்மா நின்னதை பார்த்ததுமே தெரிஞ்சுடுச்சு – ஸ்ரீகாந்த் விமர்சனம்
இந்த போட்டியில் ரோகித் சர்மா இரண்டு போட்டிகளில் 113 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். இதற்கு அடுத்து முதல் போட்டியில் அரைசதம் அடித்திருந்த சமீர் ரிஸ்வி இந்த போட்டியில் 90 ரன்கள் எடுத்து உடனடியாக ரோகித் சர்மாவிடமிருந்து ஆரஞ்சு வாங்கியிருக்கிறார். சிஎஸ்கே இரண்டு சீசங்களுக்கு முன்பு இவரை 8.2 கோடிக்கு வாங்கி கழட்டிவிட்டது. இந்த நிலையில் டெல்லி இவரை வெறும் 95 லட்சத்திற்கு வாங்கி அசத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.