தோனியை குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்க? டெல்லி வீரர் சொன்ன வித்தியாச பதில்.. ரசிகர்கள் இதயத்தை வென்றது

0
2062

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது கடைசி கட்ட கிரிக்கெட் வாழ்க்கையில் இருக்கிறார். 41 வயதான தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பது சந்தேகமே. இந்த நிலையில் சென்னை அணி தற்போது 15 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியல் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் தோனி தான். டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கூட சிஎஸ்கே அணி 140 ரன்கள் சேர்ப்பதற்கு தடுமாறியது. அப்போது களத்துக்கு வந்த தோனி 9 பந்துகளில் 20 ரன்கள் விளாசினார். இதில் இரண்டு சிக்ஸர்கள் அடங்கும்.

- Advertisement -

222 என்ற அளவில் ஸ்ட்ரைக் ரெட்டை தோனி வைத்திருந்தார். இதேபோன்று பந்துவீச்சிலும் சிஎஸ்கே அணியை சிறப்பாக வழி நடத்தினார். மற்ற அணி கேப்டன்கள் எல்லாம் நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பிறகு முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்திருப்பார்கள்.

ஆனால் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். அதற்கு காரணம் என்ன என்று அவரே கூறினார். ஒரே ஆடுகளத்தில் தொடங்க போட்டி நடைபெறுவதால், அது தோய்வாக மாறிவிடும். இதனால் இரண்டாவது பேட்டிங் செய்யும்போது ஷாட்களை விளையாட கடினமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

தோனி சொன்னது போலயே அது நடந்தது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த நிலையில் தோனி குறித்து ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என டெல்லி கேப்பிட்டல் அணி வீரர்களிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு பலரும் தோனி ஒரு ஜாம்பவான், பெரிய அண்ணன், தல, தலைவா, கேப்டன் கூல் ,பினிஷர் என்றெல்லாம் அழைத்திருந்தார்கள்.

- Advertisement -

ஏன் ஒரு சிலர் கடவுள் என்றும் கூறினார்கள். ஆனால் டெல்லி அணியின் பிரியாம் கார்க்கிடம் கேட்கப்பட்ட போது, அது எப்படி தோனியின் மகிமையை ஒரே வார்த்தையில் சொல்ல முடியும். ஒரே வார்த்தையில் அவரை அடக்கிட முடியாது என்று பதில் கூறினார்.

இவருடைய வித்தியாசமான பதில் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது. இதேபோன்று முகேஷ் குமாரும் தோனி பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றும் பதிலளித்தார். தோனி குறித்து எதிரணி வீரர்களே இவ்வாறு கூறுவதைப் பார்த்து தோனி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.