கடந்த ஆண்டு ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து தற்போது இணைந்து விளையாட போகும் தீபக் ஹூடா & குருனால் பாண்டியா

0
451
Krunal Pandya and Deepak Hooda

கடந்த ஆண்டு சையது முஷ்டாக் அழி டிராபி தொடர் நடைபெறுவதற்கு முன்பாக பரோடா அணி விரர் தீபக் ஹூடா தான் தொடரில் பங்கேற்க போவதில்லை என்று கூறி விலகிக் கொண்டார். அணியிலிருந்து தான் விலக கேப்டன் குருனால் பாண்டியா தான் காரணம் என்றும் அவர் கூறியிருந்தார்.

போட்டி நடைபெறுவதற்கு முன்பாக தான் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது, அவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். தலைமை பயிற்சியாளரிடம் முறையான அனுமதி வாங்கிய பின்னரே நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் அணியின் கேப்டன் நான் இருக்கையில் என்னிடம் அனுமதி வாங்காமல் இப்படி விளையாடுவது முறையல்ல என்று என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்.

- Advertisement -

அனைத்து வீரர்கள் முன்னிலையில் அவர் என்னை திட்டியது தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். இந்த சம்பவம் இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அனைத்திந்திய ரசிகர்களும் குருனால் பாண்டியா இவ்வாறு நடந்து கொள்வது அழகல்ல என்றும் கண்டனங்களை தெரிவித்தனர்.

ஒரே அணியில் இடம் பெற்று விளையாட போகும் குருனால் மற்றும் ஹூடா

நடைபெற்றுக்கொண்டிருக்கும் மெகா ஏலத்தில் லக்னோ அணி நிர்வாகம் தீபக் ஹூடாவை 5 கோடியே 75 லட்ச ரூபாய்க்கும் குருனால் பாண்டியாவை 8 கோடியே 25 லட்ச ரூபாய்க்கும் கைப்பற்றியுள்ளது. இதன் மூலமாக இவர்கள் இருவரும் ஒரே அணியில் இடம்பெற்று விளையாட போகின்றனர்.

- Advertisement -

இவர்கள் இருவருமே ஆல்ரவுண்டர் வீரர்கள். குறிப்பாக இவர்கள் இருவரும் ஸ்பின் பந்து வீச தெரிந்த ஆல்ரவுண்டர் வீரர்கள். இவர்கள் இருவரும் இணைந்து நட்பு பாராட்டி ஒரு அனியில் எப்படி விளையாட போகிறார்கள் என்பதை காண இந்திய ரசிகர்கள் தற்போது முதலே மிக ஆவலாக உள்ளனர்.

லக்னோ அணி வீரர்களின் தற்போதைய நிலவரம் :

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் :

கே.எல்.ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ரவி பிஷனோய்

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் :

குவின்டன் டீ காக் (6.75 கோடி)
மணீஷ்பாண்டே(4.60 கோடி)
தீபக்ஹூடா(5.75 கோடி)
குருனால் பாண்டியா(8.25 கோடி)
ஜேசன் ஹோல்டர்(8.75 கோடி)