2022 ஐ.பி.எல் தொடரில் முக்காவாசி போட்டிகளில் தீபக் சாஹர் கலந்து கொள்வது கேள்விக்குறி ? அதிர்ச்சியில் சி.எஸ்.கே நிர்வாகம்

0
172
Deepak Chahar and MS Dhoni

கடந்த மாதம் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீபக் சஹர் 14 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. சென்னை அணிக்காக 2018 ஆம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் மிக அற்புதமாக பந்துவீசி அசத்தினார். சென்னை அணிக்கு கடந்த 4 ஆண்டுகளில் இவர் 58 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் ஒரேயொரு ஒரு நாள் போட்டியில் தீபக் சஹர் விளையாடினார். ஒரு போட்டியில் விளையாடிய ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அதேபோல 3 டி20 போட்டியில் விளையாடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். கடைசி போட்டியான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடிய போது அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

- Advertisement -

அதன் காரணமாகவே பாதியிலேயே ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். மருத்துவப் பரிசோதனை செய்து பார்க்கையில் அவருடைய கால் தசையில் சிறிய பிளவு ஏற்பட்டுள்ளது. அந்த காயம் குணமடைய சில நாட்கள் தேவைப்படும் என்று மருத்துவ குழு கூறியுள்ளது.

எனவே அது சம்பந்தமாக தனது உடல்நிலையை சரி செய்யும் விதத்தில் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட போவதில்லை என்று கூறப்பட்டது. எனினும் நிச்சயமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது.

பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளை தவிர்க்க உள்ள தீபக் சஹர்

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் தற்போது தீபக் சஹர் தன்னுடைய உடல் நிலை சம்பந்தமாக சிகிச்சை மற்றும் உரிய பயிற்சி எடுத்து வருகிறார். தற்போது வந்த தகவலின் படி தீபக் சஹர் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன் முழுவதுமாக குணமடைய வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அதன்படி பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மத்தியில் கண்டிப்பாக விளையாட வேண்டிய ஒருவராக தீபக் சஹர் இருக்கும் நிலையில் அவர் பல போட்டிகளில் விளையாடாமல் போனால் அது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

தேசிய கிரிக்கெட் அகாடமி தீபக் சஹர் குறித்த மருத்துவ அறிவிப்பை கூடிய விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்பை எதிர்நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் காத்துக் கொண்டிருப்பதாகவும், அந்த அறிவிப்பு பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை சென்னை அணி நிர்வாகம் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது