கிரிக்கெட்

தல தோனியை பார்த்து தான் இந்த விஷயத்தை கற்றுக்கொண்டேன் – தீபக் சஹர் பெருமிதம்

இலங்கைக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது . 69 ரன்கள் அடித்த இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர் தீபக் சஹர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்று பட்டி தொட்டியெல்லாம் இவரது புகழ் பறவியது இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவிருக்கிறது போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தீபக் சஹர் தோனியிடமிருந்தே சேசிங் செய்ய கூடிய திறமை பார்த்து தெரிந்துக்கொண்டேன் என கூறியுள்ளார்.

- Advertisement -

தல தோனியை பார்த்து கற்றுக்கொண்ட விஷயம்:

“சிஎஸ்கே அணியில் தோனியின் தலைமையில் கீழ் விளையாடி உள்ளேன் . சேசிங்கின் போது தோனியின் பேட்டிங்கை பார்த்துள்ளேன்.
ஒரு போட்டியை எப்படி இறுதிவரை எடுத்து செல்வது, எப்படி இருக்கமான சூழ்நிலையை கட்டுப்படுத்துவது போனற நுணுக்கங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அவரிடம் பேசும் பொழுது அவர் நிறைய விஷயங்களை என்னுடன் பகிர்ந்து இருக்கிறார். எந்த மாதிரி சூழ்நிலையில் எந்த மாதிரி விளையாட வேண்டும் எப்படி ஆட்டத்தை இறுதி வரை கொண்டு செல்ல வேண்டும் என நிறைய விஷயங்கள் அவரிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளேன்.

அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் இப்போட்டியில் எனக்கு மிகவும் உதவியது.என்னை பொருத்தவரை பந்துவீச்சு அல்லது பேட்டிங் இரண்டில் எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சில போட்டிகளில் எனது பேட்டிங் வாய்ப்புக்காக காத்திருந்தேன், ஆனால் அதற்கான சூழ்நிலை அமையவில்லை. இரண்டாம் போட்டியில் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளவும் ஆசைப்பட்டேன் .

- Advertisement -

என் தந்தையே எனக்கு பயிற்சியாளர். மக்களுக்கு நாம் பேட்ஸ்மேனாகவோ அல்லது ஆல்ரவுண்டர்களாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது பெரிய விஷயமில்லை . அவர்களைப் பொருத்தவரை பேட்டிங் செய்யும் போது எளிதாக ரன் எடுக்க கூடியவராகவும் அதே சமயம் விக்கெட் எளிதில் விடக்கூடாதவராகவும் இருக்க வேண்டும் என்று அப்பா கூறுவார். இதனால் நான் சி.எஸ்.கே அணியில் வேகபந்து வீச்சாளராக அணிக்குள் வந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேட்டிங்கில் கவனம் செலுத்தினேன். எனக்கு பயிற்சியாளராக எனது தந்தை மிகவும் ஆதரவாக இருந்தார்.