ஐபிஎல் 2024

நீ வந்து பண்ண சம்பவம்தான் மாஸ் தம்பி.. ஷஷாங்க் சிங் ஜானி பேர்ஸ்டோ போட்டிக்கு பின் உரையாடல்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இம்பேக்ட் பிளேயராக கடந்த மற்றும் நடப்பு ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங் இருந்து வருகிறார். நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக பெற்ற சாதனை வெற்றியில் பெரும்பங்கு வகித்த அவர், வெற்றி குறித்து பேசியிருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுக்க, இவ்வளவு பெரிய மொத்தத்தை பஞ்சாப் கிங்ஸ் அணியால் துரத்தி வெல்ல முடியாது என்று தான் பலரும் நினைத்து இருந்தார்கள். ஏனென்றால் உலக டி20 கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய மொத்தத்தை எந்த அணியும் துரத்தி வென்றது கிடையாது.

இந்த நிலையில் நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணி 262 ரன்கள் துரத்தி வெற்றிகரமாக போட்டியை நிறைவு செய்து உலக சாதனை படைத்தது. இதில் பவர் பிளேவில் அற்புதமான துவக்கத்தை கொடுத்த பிரப்சிம்ரன்சிங் வெறும் 20 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். பவர் பிளேவில் மட்டும் பஞ்சாப் அணி 93 ரன்கள் சேர்த்தது. நேற்று இவர் உருவாக்கிய வலிமையான அடித்தளம் சாதனை வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.

இதுகுறித்து வெற்றிக்குப் பின் பேசியிருக்கும் பிரப்சிம்ரன் சிங் கூறும்பொழுது “இம்பேக்ட் பிளேயர் என்பது இளம் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பாகும். இந்த விதியை நான் அப்படித்தான் பார்க்கிறேன். நாங்கள் தோல்வியடையும் பொழுது எங்களுடைய பயிற்சியாளர்கள் எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

காரணம் என்னவென்றால், நாங்கள் எவ்வளவு திறமையானவர்கள் என்பது எங்களுடைய பயிற்சியாளர்களுக்கு தெரியும். நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் நம்பிக்கையுடன் இருந்தோம். அவர்களால் அடிக்க முடியும் என்றால் எங்களாலும் அடிக்க முடியும் என்று எங்கள் பயிற்சியாளர்கள் கூறினார்கள். நாங்கள் எங்களுடைய வழியில் வெளிப்படையாக அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த வேண்டியதாக இருந்தது.

இதையும் படிங்க : எங்களோட கோச் ஒரு விஷயத்துல தெளிவா இருந்தாங்க.. நேத்து அதைத்தான் நாங்க திருப்பி செஞ்சோம் – பிரப்சிம்ரன் சிங் பேட்டி

ஜானி ஒரு மிகப்பெரிய வீரர். ஃபார்மில் இல்லாத பொழுது திரும்ப சிறந்த முறைக்கு வருவதற்கு ஒரே ஒரு போட்டி மட்டுமே போதும். அப்படி போட்டியில் அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் நேற்று பார்த்தீர்கள்” என்று அவரை பாராட்டி பேசி இருக்கிறார்

Published by