ஓய்வை திரும்பப்பெற்று, மீண்டும் ஆர்சிபி அணிக்காக விளையாடுவேனா? – டி வில்லியர்ஸ் பேட்டி!

0
848

ஓய்வு முடிவை திரும்பப்பெற்று மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடுவேனா? என்பது குறித்து ஏபி டி வில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் மிஸ்டர் 360 என்று அழைக்கப்பட்டு வரும் ஏபி டி வில்லியர்ஸ், தென் ஆப்பிரிக்கா அணிக்காக மூன்றுவித போட்டிகளிலும் கேப்டனாக இருந்திருக்கிறார். எண்ணற்ற பல சாதனைகளை பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பில் செய்திருக்கிறார்

- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு மூன்று வருடங்கள் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார்.

ஆர்சிபி அணியில் விராட் கோலியுடன் பல வருடங்கள் பயணித்த டி வில்லியர்ஸ் திடீரென கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு சில வாரங்கள் முன்பு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து மேலும் அதிர்ச்சியை கொடுத்தார். விராட் கோலியும் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஐபிஎல் சீசன் முடிவுற்ற பிறகு ஆர்சிபி அணி நிர்வாகம் பலமுறை டி வில்லியர்ஸை அணுகி, ஓய்வு முடிவை திரும்பப்பெற்று இன்னும் சில ஆண்டுகள் ஆர்சிபி அணிக்காக விளையாடும் படி வலியுறுத்தியுள்ளனர். அதற்கு ஏபி டி வில்லியர்ஸ் மறுத்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த மார்ச் 26ஆம் தேதி பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணியின் புதிய ஜெர்சி அறிமுக விழா நடந்தது. அதில் ஆர்சிபி லெஜென்ட்ஸ் ஏபி டி வில்லியர்ஸ், கிரிஸ் கெயில் இருவரும் பங்கேற்றனர். அவர்களுக்கு உரிய மரியாதையும் செலுத்தப்பட்டது.

அப்போது டி வில்லியர்ஸிடம் ஓய்வு முடிவை திரும்பப்பெற்று மீண்டும் ஆர்சிபி அணிக்காக விளையாடுவீர்களா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டிவில்லியர்ஸ் பதில் கூறியதாவது,

“தற்போது இருக்கும் ஆர்சிபி அணி சிறப்பாக உள்ளது என நினைக்கிறேன். நான் விளையாடினால், பிளேயிங் லெவனில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதே சந்தேகம்தான். ஆகையால் நான் ரசிகர்களில் ஒருவனாக இருந்து கொள்கிறேன். வீரர்களுக்கு சப்போர்ட் செய்து கோப்பையை பெறுவதற்கு ஆதரவாகவும் இருக்கிறேன். இந்த வருடம் கப் நமக்கே.” என்று கூறினார்.