கொரோனா முதல் பரிசோதனையில் பாசிட்டிவ பின்னர் நெகட்டிவ் – நிம்மதி பெருமூச்சு விட்டுள்ள முக்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்

0
72
Delhi Capitals

கடந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக் கோப்பை டி20 தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்கள் யாரும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் வீரர் மிட்செல் மார்ஷை அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். மிக அற்புதமாக இறுதிப்போட்டியில் விளையாடி ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியில் மிட்ச்செல் மார்ஸ் களமிறங்கி விளையாடினார். தன்னுடைய முதல் போட்டியில் 24 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

- Advertisement -
ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ்

நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கு பெறுவதற்கு சமீபத்தில் இந்தியா வந்த மிட்ச்செல் மார்ஷுக்கு கொரோனோ பரிசோதனை எடுக்கப்பட்டது. ராபிட் ஆண்டிஜன் பரிசோதனையில் அவருக்கு பாசிட்டிவ் என முடிவு வந்தது. இதனால் டெல்லி அணி நிர்வாகம் உட்பட ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் தற்பொழுது ஆர்டி – பிசிஆர் பரிசோதனையில் முடிவு நெகட்டிவாக வந்துள்ளது. அதுமட்டுமன்றி டெல்லி அணியின் சப்போர்ட் ஸ்டாஃப் மூன்று பேரின் பரிசோதனையும் நெகட்டிவாக வந்துள்ளது. அனைவரின் பரிசோதனையும் நெகட்டிவாக வந்ததன் அடிப்படையில் தற்போது டெல்லி அணி நிர்வாகம் மற்றும் அதன் ரசிகர்கள் நிம்மதியாக உள்ளனர்.

ஐந்து போட்டிகளில் விளையாடி 2 போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது 8-வது இடத்தில் டெல்லி அணி உள்ளது. அதனுடைய அடுத்த போட்டி பஞ்சாப் அணிக்கு எதிராக வருகிற 20-ஆம் தேதி ஏப்ரல் அன்று இரவு புனேவில் நடைபெற இருக்கின்றது. தற்பொழுது அந்த பரிசோதனைகள் டெல்லி அணி நிர்வாகத்திலுள்ள அனைத்து வீரர்கள் மட்டும் ஸ்டாஃப்களின் முடிவு நெகட்டிவ் ஆக வந்ததன் அடிப்படையில் அனைவரும் தற்போது புனேவுக்கு செல்ல தயாராகி விட்டனர்.

- Advertisement -

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முன்னேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.