ஐபிஎல் 2025

இந்தியர்களை தப்பா சொல்லாதீங்க.. பாகிஸ்தான் பத்திரிக்கையாளருக்கு டேவிட் வார்னர் பதிலடி – என்ன நடந்தது?

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேவிட் வார்னரிடம் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் இந்தியர்கள் பற்றி எழுப்பிய ஒரு கேள்விக்கு அவர் சரியான பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது டேவிட் வார்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் நடத்தும் பிஎஸ்எல் டி20 லீக்கில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். இந்த நிலையில் அவர் கராச்சி கிங்ஸ் கேப்டனாக பத்திரிக்கையாளர் சந்திப்பை பாகிஸ்தானில் எதிர்கொண்டார். அப்பொழுதுதான் இந்த சூடான சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் விலை போகவில்லை

ஐபிஎல் தொடரில் டேவிட் வார்னர் கடைசியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விளையாடி இருந்தார். விக்கெட்டை சீக்கிரத்தில் இழக்கவில்லை என்றாலும் கூட அவரால் பழைய அதிரடியில் இறங்க முடியவில்லை. இதன் காரணமாக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் கீழே இறங்கியது. இது அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.

இதன் காரணமாக நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 10 அணிகளில் எந்த அணியும் பேக்கப் ஓபனராக கூட அவரை வாங்கவில்லை. மிகப்பெரிய நட்சத்திர வீரரான அவர் ஐபிஎல் மெகா ஏலத்தில் விலை போகாதது பலருக்கும் ஆச்சரியத்தை கொண்டு செய்தது. இந்த நிலையில்தான் பிஎஸ்எல் தொடரில் கராச்சி கிங்ஸ் அணிக்காக செயல்பட இருக்கிறார்.

- Advertisement -

பத்திரிகையாளரின் தேவையில்லாத கேள்வி

இப்படியான சூழ்நிலையில் டேவிட் வார்னர் கராச்சி கிங்ஸ் கேப்டன் ஆக பாகிஸ்தானில் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்டார். அப்பொழுது ஒரு பத்திரிக்கையாளர் ஐபிஎல் மெகா ஏலத்தில் டேவிட் வார்னர் விலை போகாதது குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரை கேலி செய்வதாகவும், வெறுப்பை பரப்புவதாகவும் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க : சிஎஸ்கே தோல்வி.. முதல் இடத்துக்கு வந்த சச்சின்.. கீழே இறங்கிய தோனி.. ஆச்சரியமான புள்ளி விபரம்

இதற்கு டேவிட் வார்னர் பதிலளிக்கும் பொழுது “நீங்கள் சொல்வதை நான் இப்பொழுதுதான் முதல்முறையாக கேள்விப்படுகிறேன். அப்படி எந்த இந்திய ரசிகர்களும் பேசியதை நான் பார்க்கவில்லை. நான் கிரிக்கெட் விளையாடவே விரும்புகிறேன். முன்பு எனது சர்வதேச கிரிக்கெட் அட்டவணை பிஎஸ்எல் தொடரில் விளையாட அனுமதிக்கவில்லை. இப்போது நான் கராச்சி கிங்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்படுகிறேன். எங்களால் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by