ஐபிஎல் 2024

டி20 உலக கோப்பையில் இந்திய அணி எதுவும் செய்யாது.. ஏமாறத்தான் போறாங்க – டேவிட் லாயிட் கணிப்பு

நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் 8 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்று சஞ்சு samsung தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த நிலையில் வரிசையாக 4 போட்டிகளை தோற்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தையே பிடித்தது. தற்போது தனது அணியினர் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று பிளே ஆப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி பெங்களூர் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சு மிகவும் திட்டமிட்டதாகவும் புத்திசாலித்தனமாகவும் இருந்தது. இதன் காரணமாகவே ஆர்சிபி அணி தேவையான கூடுதல் 20 ரன்களை பெற முடியாமல் தோல்வியடைந்தது.

நேற்று அவர் ஆர்சிபி பேட்ஸ்மேன்களை லேக் சைடில் மட்டுமே அடிக்கும்படி, பந்தை அவர்களது உடம்பில் லைனில் மிகச் சரியாக வைத்து நெருக்கடி கொடுத்தார். இதன் காரணமாக அவர்களால் மைதானத்தின் பெரிய பக்கத்தில் பந்தை அடிப்பது சிரமமாக இருந்தது. இதனால் சிறப்பாக விளையாடிய கேமரூன் கிரீன் மற்றும் மேக்ஸ்வெல் முதல் பந்தில் அவர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்கள்.

நேற்று ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு ஓவர்கள் பந்து வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டு தந்து இரண்டு முக்கிய விக்கெட் கைப்பற்றினார். மேலும் ரஜத் பட்டிதாரை ரன்களுக்கு செல்ல விடாமல் மிகச்சிறப்பாக தடுத்தார். அவர் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை ஜுரல் தவறவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தற்போது தனது அணி வீரர்கள் குறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் “சஞ்சு சாம்சன் இடம் அவரது பேட்டிங் குறித்து நீங்கள் கேட்டீர்கள் என்றால் அவர் சுயநலமாக விளையாடுவதாக கூறுவார். அவர் தற்பொழுது 155 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுகிறார். எங்களுக்கு அவரிடம் இருந்து இதுதான் தேவைப்பட்டது. ஆனால் அவர் இதை சுயநலமான பேட்டிங் என்று எண்ணக்கூடியவர். நான் அவர் குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக அவருக்கு டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் கிடைத்ததில் எனக்கு பெரிய மகிழ்ச்சி.

இதையும் படிங்க : சாம்சன் தன்னை சுயநலமாக ஆடறதா சொல்லுவாரு.. ரியான் பராக் கிட்ட எனக்கு ஏமாற்றம்தான் – அஸ்வின் பேட்டி

ரியான் பராக்கிடம் எனக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. மேலும் ஆட்டத்தை கடைசியில் தவற விடுகிறார் என்று நான் சொல்லுவேன். ரியான் மற்றும் ஜெய்ஸ்வால் இருவருமே உயர்தரமான இளம் வீரர்கள். இதன் காரணமாக அவர்களிடம் எப்போதும் இதைத்தான் கூறுவேன். அவர்கள் தற்போது சில்வர் லைனில் இருக்கிறார்கள். இதனால்தான் இந்த அணியை பற்றி நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Published by