கிரிக்கெட் களத்தில் விதிமுறைகளை மீறினால் மஞ்சள் அட்டை அல்லது சிவப்பு அட்டை கொடுத்து வீரர்களை வெளியேற்ற வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட் கூறி இருக்கிறார்.
கிரிக்கெட் களத்தில் வீரர்கள் விதிமுறைகளை மீறும் பொழுது போட்டி முடிந்த பிறகு அவர்களுக்கு அபராதம் அல்லது அடுத்த போட்டிகளில் இருந்து நீக்கப்படுதல் தண்டனையாக கொடுக்கப்படுகிறது. ஆனால் கால்பந்து களத்தில் இருப்பது போல உடனடியாக வீரரை வெளியேற்றுவது கிடையாது.
இங்கிலாந்து சம்பவம்
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது இங்கிலாந்து வீரர்கள் களத்தில் நேரத்தை வேண்டுமென்றே செலவழித்து இந்திய வீரர்களை கோபப்படுத்தினார்கள். இதன் காரணமாக கேப்டன் பில் அவர்களிடம் கடுமையான வார்த்தைகளை கொண்டு மோதினார்.
அந்த நேரத்தில் இங்கிலாந்து தரப்பில் இருந்து கில் செய்தது மிகவும் அநாகரிகமானது எனவும், அவருக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் கில்லுக்கு பெரிய தண்டனைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. இது குறித்து அப்பொழுது நிறைய விமர்சனங்கள் இருந்தது.
ரெட் கார்டு கொடுக்க வேண்டும்
இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் டேவிட் லாயிட் கூறும் பொழுது ” நான் எலைட் அம்பயர் குழுவில் இருந்து வந்தேன். நான் அதில் எப்பொழுதுமே வீரர்கள் தவறு செய்யும் பொழுது மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டை கொடுக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என தீவிரமாக பேசி வந்தேன். வீரர்கள் நடந்து கொள்ளும் முறைக்கு ஏற்ற வகையில் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகள் கொடுக்க வேண்டும்”
இதையும் படிங்க : இங்கிலாந்துல கில் செஞ்ச தப்ப.. ஆசிய கோப்பைல சூரியகுமார் செய்யக்கூடாது – மதன்லால் வலியுறுத்தல்
“வீரர்களே இதைப் பற்றி வருத்தப்படாதீர்கள். நீங்கள் விளையாடுவது நான்கு நாள் கிரிக்கெட் அல்லது ஐந்து நாள் கிரிக்கெட் எதுவாக இருந்தாலும் நீங்கள் ஒரே சமநிலையில் தொடர்ந்து இருக்க வேண்டும். மீறி களத்தில் தவறு செய்தால் யோசிக்காமல் வெளியேற்றப்பட வேண்டும்” என்று கில் இங்கிலாந்தில் பேசிய விதம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார்.






