இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் தற்போது 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மூன்றாவது போட்டியில் முதலில் விளையாடிக் கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி தற்போது 8 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்த நிலையில் விளையாடிக் கொண்டிருக்கிறது.நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டரில் மிட்ச்செல் 109 ரன்கள் குவித்துள்ளார். இன்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் நிறைய சாதனைகளை அவர் படைத்திருக்கிறார்.
சாதனைகளை தன் பெயருக்கு எழுதிய டரில் மிட்ச்செல்
முதல் போட்டியில் சதம் இரண்டாவது போட்டியில் சதம் மற்றும் மூன்றாவது போட்டியில் இன்று சதம் என தொடர்ந்து மூன்று போட்டியிலும் சதம் அடித்திருக்கிறார். நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் இங்கிலாந்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமைக்கு டரில் மிட்ச்செல் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.கடந்த 73 வருடங்களில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் மத்தியில், இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களில் 400 ரன்களை( ஐந்து இன்னிங்சில் 482 ரன்கள் இதுவரை குவித்துள்ளார்) கடந்த வீரர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
ஐந்து இன்னிங்ஸ்களில் இதுவரை மொத்தமாக 482 ரன்கள் குவித்திருக்கிறார். நடைபெற்றுக்கொண்டிருக்கும் டெஸ்ட் தொடரில் அவருடைய பேட்டிங் சராசரி 120க்கு மேல் சென்றுள்ளது. அவருடைய ஒட்டுமொத்த டெஸ்ட் பேட்டிங் சராசரி தற்பொழுது 60க்கு மேல் சென்றுள்ளது.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னர் அவர் மூன்று அரை சதம் மற்றும் ஒரு சதம் மட்டுமே குவித்திருந்தார். தற்பொழுது இந்த டெஸ்ட் தொடரில் ஒரு அரைசதம் மற்றும் மூன்று சதங்கள் குறித்து தன்னுடைய டெஸ்ட் கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் என்று தான் கூற வேண்டும்.