டி20 உலகக்கோப்பையை வெல்லப்போவது இந்த அணி தான் – இரண்டு முறை டி20 உலக கோப்பை வென்ற டேரன் சமி

0
824
Daren Sammy

அக்டோபர் 17 முதல் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் நடக்க இருக்கிறது. கடந்த ஆண்டு நடக்க வேண்டிய தொடர் கொரோனா பெருந் தொற்று காரணமாக அமைந்தது இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. ஏற்கனவே நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் எல்லாம் இந்த தொடரில் ஆடப் போகும் வீரர்களின் பெயர்களை வெளியிட்டு விட்டனர். ஒவ்வொரு அணியும் இந்த தொடரில் வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு பயிற்சியெடுத்து வருகின்றன. இந்த தொடரில் வெல்லப் போகும் அணி யார் என்ற கேள்விக்கு இரண்டு முறை உலகக்கோப்பை வென்ற கேப்டனான டேரன் சமி பதிலளித்துள்ளார்.

ஐசிசிக்கு அவர் அளித்த பேட்டியில் இந்தத் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி தான் வெல்லும் எனக் கூறியுள்ளார். தற்போது ஓய்வு பெற்றுள்ள சமி, மூன்றாவது முறையாக கோப்பை வென்று மேற்கிந்தியத் தீவுகள் சாதனை படைக்கும் என்று கூறியுள்ளார். ICC டிஜிட்டல் ஷோ என்ற தொடரில் பேசிய சமி மேற்கிந்தியத் தீவுகள் தான் ஜெயிக்கும் என உறுதியாக நம்புகிறேன் என்று ஆணித்தரமாக கூறியுள்ளார்.

- Advertisement -
Daren Sammy T20

எனது நாடு என்று இதைக் கூறுகிறேன் என பலர் நினைப்பார்கள். ஆனால் அப்படியில்லை. கெயில், பொல்லார்டு, ஃபேபியன் ஆலன், ரசல் போன்ற மிகச்சிறந்த வீரர்கள் இருப்பதால் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. கடந்த மூன்று தொடர்களில் நாங்கள் அரையிறுதி சென்றோம். மூன்றில் இரண்டு முறை தொடரை வென்றோம். அதே போல இம்முறையும் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் விளையாடிய அணி தான் தொடரை வெல்ல வேண்டும் என்பது கிடையாது. அதற்கென தனித்துவமான வீரர்கள் தேவை” எனக் கூறினார் சமி. தொடர் நாயகன் விருதை யார் வெல்லப் போகிறார்கள் என்பதைக் காண சமி ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அசத்தும் ஆல் ரவுண்டர் ரசல் இதை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என்று கூறினார் சமி.

சமி கூறியபடி நடக்குமா அல்லது வேறு அணி எதாவது இந்த முறை டி20 உலகக்கோப்பையை வென்று அசத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -