இந்திய கிரிக்கெட்

உண்மை தெரியாதா?.. தம்பிகளா இந்த பேப்பரை தூக்கி காட்டுற வேலையை நிறுத்துங்க.. சத்தியமா செம சலிப்பா இருக்கு – டேல் ஸ்டெய்ன் வலியுறுத்தல்

நடப்பு ஐபிஎல் தொடரில் வீரர்கள் சிறப்பாக விளையாடினால் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து கொண்டாடும் பேப்பர் கொண்டாட்டம் சலிப்பாகிவிட்டதாக டேல் ஸ்டெய்ன் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஹைதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மா பஞ்சாப் அணிக்கு எதிராக சதம் அடித்ததும் இது ஆரஞ்சு ஆரம்பிக்காக என்று குறிப்பிடப்பட்டிருந்த பேப்பரை பாக்கெட்டில் இருந்து எடுத்துக்காட்டி கொண்டாடினார். தற்போது ஐபிஎல் தொடரில் இது ஒரு பழக்கமாக மாறிவிட்டது.

தொடரும் கொண்டாட்டம்

இந்த நிலையில் சிஎஸ்கே வீரர் உர்வில் படேல் லக்னோ அணிக்கு எதிராக அதிரடி அரைசதம் அடித்ததும் பாக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்துக்காட்டி கொண்டாடினார். அதில் அவர் தன்னுடைய அப்பாவுக்கு நன்றி செலுத்தும் வாசகங்களை எழுதியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ வீரர் ஆகாஷ் சிங் இப்படியான ஒரு பேப்பரை எடுத்துக்காட்டி கொண்டாடினார். மேலும் இதே தொடரில் ரகுவன்சியும் பேப்பரை காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

- Advertisement -

முடிவுக்கு வரவேண்டும்

தற்போது இந்த கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்து விட்டதாகவும், இதெல்லாம் தேவையே இல்லாத ஒன்று எனவும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : இந்த ஐபிஎல் சீசனில் நாங்கள் உருப்படாமல் போனதற்கு முக்கிய காரணம் இதுதான்.. வேற லெவல்ல பண்ணிட்டோம் – ரிஷப் பண்ட் பேட்டி

இதுகுறித்து அவர் பேசும்போது “காகிதங்களை ஒதுக்கி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனி அது ட்ரெண்டிங்கில் இல்லை. நேர்மையாக சொல்லப் போனால் இதற்கு முன்பும் கூட இப்படி பேப்பரை தூக்கி காட்டி கொண்டாடுவது ட்ரெண்டிங்கில் இருந்தது கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts