CWC புள்ளி பட்டியல்.. இந்தியாவுக்கு உதவிய நெதர்லாந்து.. அரையிறுதி வாய்ப்பு யாருக்கு எப்படி இருக்கிறது?.. முழு விபரங்கள் இதோ!

0
1807
ICT

இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், இரண்டாவது வாரத்தில் சூடுப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது!

உலகக் கோப்பை துவக்க போட்டியில் இங்கிலாந்தை நியூசிலாந்து வெல்ல அதற்கு அடுத்து மீண்டும் நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் வெல்ல, நேற்று தென் ஆப்பிரிக்காவை நெதர்லாந்து அணி வென்றதின் காரணமாக, புள்ளிப் பட்டியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.

- Advertisement -

மேலும் பெரிய அணிகள் சிறிய அணிகளிடம் தோல்வி அடைகின்ற காரணத்தினால், அரை இறுதி வாய்ப்பு பலருக்கும் சிறந்த ஒன்றாக தற்பொழுது மாறி இருக்கிறது. ஆஸ்திரேலியா இரண்டு பெரிய அணிகளிடம் தோற்க, இங்கிலாந்து ஒரு பெரிய அணி மற்றும் ஒரு சிறிய அணியிடம் தோற்க, இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தோற்று ஆப்பிரிக்கா நேற்று தோற்று கோட்டை விட்டது.

இந்தப் போட்டிக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணி இரண்டு போட்டிகளில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இரண்டு அணிகளையும் வீழ்த்தி ரன் ரேட்டில் யாரையும் விட மிகச் சிறப்பான அளவு பெற்று இருந்தது. இந்தியா மூன்று போட்டிகள் விளையாடி 6 புள்ளிகள் எடுத்த காரணத்தினால் முதல் இடத்தில் இருந்தது. நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்று இருந்தால் முதலிடத்திற்கு சென்றிருக்கும். ஆனால் நெதர்லாந்து இந்தியாவுக்கு உதவி இருக்கிறது.

- Advertisement -

இப்போது அரை இறுதிக்கு தகுதி பெறும் நான்கு அணிகள் என்று எடுத்துக் கொண்டால், இந்தியா தனது மூன்று போட்டிகளையும் வென்று பலமான முன்னணியில் உள்ளது. நாளை நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டியில் வென்றால் இந்திய அணிக்கு ஏறக்குறைய அரை இறுதி வாய்ப்பு மேற்கொண்டு உறுதியாகி விடும்.

அதே சமயத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இரண்டுமே அடுத்து இரண்டு தோல்விகளை பெறுவது அவர்களை அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியே தள்ளும். மேலும் அவர்களுக்கு ரன் ரேட் முக்கியமாகவும் இருக்கிறது.

நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தாங்கள் சந்திக்கும் பெரிய அணிகளில் ஒன்றை வீழ்த்தி, மற்ற சிறிய அணிகளை வீழ்த்தினால் அவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் நியூசிலாந்தில் வில்லியம்சன் இல்லாதது பின்னடைவு. தென் ஆப்பிரிக்கா அழுத்தம் நிறைந்த போட்டிகளில் கோட்டை விடுவது பின்னடைவு.

தற்பொழுது முதல் நான்கு இடங்களில் இந்தியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருக்கின்றன. அதற்கு அடுத்த நான்கு இடங்களில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஆஸ்திரேலியா அணிகள் இருக்கின்றன. கடைசி இரண்டு இடங்களில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் இருக்கின்றன. இந்த வாரம் முடிவில் இன்னும் உலகக்கோப்பை சுவாரசியமடையும்!

- Advertisement -