விராட் கோலி கேப்டனாக ஆடிய முதல் போட்டியில் விளையாடிய 11 இந்திய வீரர்களின் தற்போதைய நிலை

0
5972
Virat Kohli and Murali Vijay

இந்திய அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவர் விராட் கோலி. வரும் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு இந்திய அணி ரோகித் சர்மாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளதால் விராட் கோலியின் கேப்டன் பதவி ஒருநாள் போட்டிகளிலிருந்து முடிவுக்கு வருகிறது. பல வெளிநாட்டு தொடர்களை இந்திய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்ததில் கேப்டன் கோலியின் பங்கு மிகமிக அதிகம். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 2016 ஆம் ஆண்டு இறுதியில் பதவி விலகிய உடன் கேப்டன் கோலி முழுநேர கேப்டனாக செயல்பட தொடங்கினார். ஆனால் அதற்கு முன்னரே 2013 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் முதன் முறையாக இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி விளையாடி உள்ளார். அந்த ஆட்டத்தில் அவருடன் இணைந்து ஆடிய மற்ற வீரர்களை குறித்து காண்போம்..

துவக்க வீரர்கள் ரோஹித் மற்றும் தவான்

அந்த ஆட்டத்தில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் மற்றும் தவான் தான் இப்போதும் இந்திய அணியின் துவக்க வீரர்கள். அந்த ஆட்டத்தில் ரோகித் 5 ரன்களும் தவான் 28 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

மிடில் ஆடர் – விராட் கோலி, முரளி விஜய் மற்றும் தினேஷ் கார்த்திக்

தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் அந்த ஆட்டத்தில் 41 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார். தற்போது கார்த்திக் தமிழக அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். நான்காம் நிலை வீரராக அன்று களமிறங்கிய விராட் கோலி அந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட முடியாமல் வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு மிடில் ஆடர் வீரரான தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய் 30 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். தற்போது முரளிவிஜய் இந்திய அணிக்காக எந்த வித கிரிக்கெட்டிலும் விளையாடுவதில்லை.

ஆல்ரவுண்டர்கள் – ரெய்னா, ஜடேஜா மற்றும் அஸ்வின்

அந்த போட்டியில் 33 ரன்கள் எடுத்தார் ஆனால் தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஜடேஜா அந்த ஆட்டத்தில் 49 ரன்கள் எடுத்தார். அஸ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஜடேஜா மற்றும் அஸ்வின் இருவருமே தற்போது இந்திய அணியின் முக்கிய டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள்.

- Advertisement -

பந்து வீச்சாளர்கள் – உமேஷ், ஷமி மற்றும் இஷாந்த்

அன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் ஆக உமேஷ், ஷமி மற்றும் இஷாந்த் ஆகியோர் விளையாடினர். மூவருமே அன்றைய போட்டியில் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. தற்போது மூவருமே இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் ஆக விளங்கி வருகின்றனர்.

- Advertisement -