SA vs NZ: தென் ஆப்பிரிக்கா ஆடாமலே பைனல் போக முடியும்.. இந்த ஒரு விஷயம் மட்டும் நடந்தா போதும்.. ஐசிசி விதியால் கிடைக்க போகும் நன்மை

0
60

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று முதல் அரை இறுதி சுற்று தொடங்குகிறது.  மார்ச் 4ஆம் தேதி முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும் ஆஸ்திரேலியா அணியும் பலப் பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி துபாயில் நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து மார்ச் ஐந்தாம் தேதி தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்து அணியும் மோதுகிறது. இந்த தொடரில் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் மழை பாதிப்பு ஏற்பட்டு மூன்று ஆட்டங்கள் வெற்றி தோல்வி இன்றி ரத்தானது. இதனால் மழை  பாதிப்பு அரையிறுதியில் ஏற்படுமா என்ற அச்சம் இருந்துள்ளது.

- Advertisement -

ரிசர்வ் டே எப்போது?:

துபாயில் மழை பிரச்சனை இல்லை என்றாலும், அரை இறுதி போட்டிக்கும் இறுதிப் போட்டிக்கும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா ஒரு போட்டி மழையால் தடையானால் மார்ச் 5ஆம் தேதி நடைபெறும். அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த சூழலில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணி மோதும் இரண்டாவது அரை இறுதி ஆட்டம் மார்ச் 5ஆம் தேதி லாகூரில் நடைபெறுகிறது.

இந்த போட்டி மழையால் ரத்தனால் மார்ச் ஆறாம் தேதி நடைபெறும். இதேபோன்று இறுதி போட்டி மார்ச் 9ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. இதில் இந்திய அணி தகுதி பெற்றால் பைனல் துபாயில் நடைபெறும். ஒருவேளை இந்தியா தோல்வியை தழுவினால் பைனல் லாகூரில் நடைபெறும்.

- Advertisement -

ரிசர்வ் டேவிலும் ரத்தானால் என்ன நடக்கும்:

இந்த போட்டியில் மழையால் ரத்தானால் மார்ச் 10ஆம் தேதி ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இந்த இரண்டு நாள்களுமே மழை பாதிப்பு இருந்தால் என்ன ஆகும் என்பதை தற்போது பார்க்கலாம். டக்வொர்த் லூயிஸ் விதியை அமல்படுத்த சேஸிங் செய்யும் அணி குறைந்தபட்சம் 20 ஒவராவது எதிர்கொண்டிருக்க வேண்டும்.

இதையும் படிங்க: IMLT20: 10 ஃபோர்ஸ்.. 1 சிக்ஸ்.. ஹாசிம் அம்லா மாஸ் பேட்டிங்.. இங்கிலாந்தை தோற்கடித்த தென்னாப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணி

அப்படி இரண்டு நாட்களிலும் 20 ஓவர்  வீச முடியவில்லை என்றால் புள்ளி பட்டியலில் எந்த அணி முதலிடத்தில் இருக்கிறதோ, அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். இதனால் இந்தியா, ஆஸ்திரேலியா போட்டியில் மழையால் விளையாட முடியவில்லை என்றால் இந்தியா வெற்றி பெற்றதாகவும் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து போட்டி மழை பாதிப்பு ஏற்பட்டால் ஆட்டத்தை தொடர முடியாத பட்சத்தில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதேபோன்று இறுதி போட்டியில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் இரண்டு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும்.

- Advertisement -