ஹீரோவிலிருந்து, ஜீரோ ஆகிவிடுவார்.. ரிஷப் பண்ட் வாழ்க்கையை கெடுக்காதீங்க.. கம்பீருக்கு முன்னாள் வீரர் கோரிக்கை

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் சாய்ஸ் விக்கெட் கீப்பராக கே எல் ராகுலை தேர்வு செய்திருக்கிறது. ரிஷப் பண்ட், விபத்து காரணமாக ஒன்றரை ஆண்டுகள் விளையாடாத நிலையில், கே எல் ராகுல் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் பண்ட்,  அணிக்கு திரும்பிய நிலையில் அவருக்கும் பயிற்சியாளர் கம்பீருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தாம் அதிரடியாக ஆட வேண்டும் என பண்ட் நினைத்ததாகவும் அதற்கு கம்பீர் முட்டுக்கட்டை போட்டதால் பண்ட் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதே பிரச்சினையாக தெரிகிறது.

வாழ்க்கையை கெடுக்காதீர்கள்:

இந்த நிலையில் ரிஷப் பண்ட், வாழ்க்கையை கெடுக்க வேண்டாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அத்துல் வாஸன் கம்பீருக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “கவுதம் கம்பீர் அவருக்கு பிடித்த அணியை தேர்வு செய்கிறார். ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது நினைத்து எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது”.

“இதற்கு என்ன காரணம் என எனக்கு தெரியவில்லை. இந்திய அணியில் என்னதான் நடக்கிறது பண்ட் ஒரு அபாயகரமான வீரராக இருக்கிறார். அவரைப் பார்த்து எதிரணிகள் பயப்பட செய்கின்றது. தனியாளாக நின்று பண்ட் அணியை வெற்றி பெற வைப்பார். கே எல் ராகுல் ஒரு நல்ல வீரர் தான். ஆனால் அவரிடம் என்ன கம்பீர் பார்த்தார் என்று தெரியவில்லை”.

- Advertisement -

ஹீரோவிலிருந்து ஜீரோவாக மாறிவிடுவார்:

“ராகுலை டெஸ்ட் ஒரு நாள் என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் பண்டை பெஞ்சில் அமர வைக்கிறார்கள். இப்படித்தான் நல்ல வீரர்கள் வாழ்க்கையை கெடுக்கிறார்கள். தொடர்ந்து ஒரு வீரரை இதுபோல் நாம் இந்த போட்டியில் விளையாடுவோமா மாட்டோமா என குழப்பத்திலே வைத்திருந்தீர்கள் என்றால் அவர் கூடிய சீக்கிரம் ஹீரோவில் இருந்து ஜீரோவாக மாறிவிடுவார்”.

இதையும் படிங்க- இந்தியா பாக் 2 அணிக்கும்.. ஒருவர் பெரிய வித்தியாசம் ஏற்படுத்துவார்.. ஆட்டமே அவர் கையில இருக்கு – ஆஸி ஸ்டீவ் வாக்

“வங்கதேசத்த 35 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகள் இழந்த வங்கதேசத்தை 200 ரன்களுக்கு மேல் அடிக்க விட்டு இருக்கிறீர்கள். இதுவே பெரிய அணியாக இருந்தால் உங்களை தூக்கி சாப்பிட்டு விடுவார்கள். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் தொடர் மேலும் விறுவிறுப்பாக அமையும். ஒருவரே தொடர்ந்து வெற்றி பெற்று வந்தால் அது போர் அடித்து விடும்” என்றும் அத்துல் வாசன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Published by

Recent Posts