சையது முஷ்டாக் அலி தொடரில் அதிரடி காட்டி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் சிங்கங்கள்

0
311
Jagadeeshan Sai Kishore and Gaikwad

ஒவ்வொரு வருடமும் பிசிசிஐ தலைமையில் சையது முஷ்டாக் அலி தொடர் நடைபெறுவது வழக்கமாகும். 20 ஓவர் கொண்ட போட்டியை இந்த தொடர் ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக நடைபெறும். இளம் வீரர்கள் அவர்களது திறமையை வெளிக் காட்டுவதற்கு இந்த தொடர் ஒரு நல்ல அடிப்படை மேடையாக அவர்களுக்கு அமையும். இந்த தொடரில் விளையாடிய பல இளம் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்கள்.

இந்த வருடத் தொடக்கத்தில் நடந்து முடிந்த 2020-2021 ஆம் ஆண்டுக்கான தொடரில் தமிழ்நாடு அணி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது 2021-2022 ஆம் ஆண்டிற்கான சையது முஷ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. முப்பத்தி எட்டு மாநில அணிகள் பங்கேற்று நடைபெறும் இந்த தொடர் நேற்றைய முன்தினம் ( நவம்பர் 4 )துவங்கி வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

- Advertisement -

பட்டையை கிளப்பி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்

நடந்து முடிந்துள்ள சில போட்டிகளில் மகாராஷ்டிரா அணியில் விளையாடி வரும் சென்னை அணியின் ஓபனிங் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அபாரமான பார்மில் உள்ளார். தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் அரசிடம் குறித்து அதிரடியாக விளையாடி வருகிறார். முதல் போட்டியில் 30 பந்துகளில் 50 ரன்கள், இரண்டாவது போட்டியில் 54 பந்துகளில் 80 ரன்கள், மூன்றாவது போட்டியில் 47 பந்துகளில் 81 ரன்கள் குவித்து எதிரணி பந்து வீச்சாளர்களை அச்சுறுத்தி வருகிறார். 3 போட்டிகளில் 212 ரன்கள் குவித்துள்ள அவருடைய பேட்டிங் ஆவெரேஜ் 70.66 ஆகவும், அவருடைய ஸ்ட்ரைக் ரேட் விகிதம் 161.83 ஆகவுள்ளது

அவரைப்போலவே தமிழ்நாடு அணியில் விளையாடி வரும் ஸ்பின் பந்து வீச்சாளர் ரவி ஸ்ரீனிவாசன் சாய் கிஷோர் இன்று அவருடைய பிறந்த நாளில் புதுச்சேரி அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இன்றைய போட்டியில் 4 ஓவர்கள் வீசியுள்ள அவர் இருபத்தி எட்டு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மொத்தமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

தமிழ்நாடு அணியில் விளையாடி வரும் மற்ற இரண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வீரர்களான ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் தமிழ்நாடு அணியின் ஒப்பனிங் வீரர்களாக மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். மகாராஷ்டிரா அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் ஹரி
நிஷாந்த் 27 ரன்களும், ஜெகதீசன் 30 ரன்களும் குவித்து சிறப்பான துவக்கத்தை தமிழ்நாடு அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். அந்த போட்டியில் தமிழ்நாடு அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

முதல் போட்டியை தொடர்ந்து 2வது போட்டியில் ஒடிசா அணிக்கு எதிராக ஹரி நிஷாந்த் 11 ரன்களும் ஜெகதீசன் 37 ரன்களும் குவித்து சிறந்த துவக்கத்தை தமிழக அணிக்கு ஏற்படுத்திக் கொடுத்தனர். அந்த போட்டியில் தமிழக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் ஒடிசா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் சையது முஷ்டாக் அலி தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாடு அணி, இந்த வருடம் தொடரை ( மூன்றாவது முறையாக ) கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து தமிழக ரசிகர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.