எத்தனை கோடி ஆனாலும் இந்த வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவற விடாது – அடித்துச் சொல்லும் ரவி அஸ்வின்

0
3989
Ashwin about CSK IPL Auction 2022

தென்னாப்பிரிக்க அணியை சேர்ந்த ஃபேப் டு பிளேசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரை விளையாடினார். 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு இடையில் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட் அனியில் விளையாடி மீண்டும் 2018 முதல் கடந்த ஆண்டுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினார்.

சென்னை அணிக்காக மிக அற்புதமாக பேட்டிங் செய்வது அதைவிட அற்புதமாக பீல்டிங் செய்வது என தன்னுடைய முழு பங்களிப்பையும் ஒவ்வொரு போட்டியிலும் வழங்கி வருவார். குறிப்பாக கடந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை கைப்பற்ற இவரும் முக்கிய காரணமாக இருந்தது குறிப்பிடதக்கது.

- Advertisement -

இறுதிப்போட்டியில் 59 பந்துகளில் 86 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதையும் கைப்பற்றினார். அதுமட்டுமின்றி கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் மொத்தமாக 633 ரன்கள் குவித்து ஆரஞ்சு கோப்பையை 2 ரன்களில் தவறவிட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை விரட்டி பிடிக்கும்

2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடந்த பொழுது ஃபேப் டு பிளேசிஸ்சை ஒன்றரை கோடி ரூபாய்க்கு ( ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் ) சென்னை நிர்வாகம் ஆர் டி எம் விதிமுறையை பயன்படுத்தி கைப்பற்றியது. ஆனால் இந்த ஆண்டு நடைபெற இருக்கின்ற மெகா ஏலத்தில் அந்த விதிமுறை இருக்கப்போவதில்லை.

எனினும் நிச்சயமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்ற அணிக்கு அவர் செல்வதை விரும்பாது. எவ்வளவு தொகை என்றாலும் அதை செலவழித்து அவரை கைப்பற்றவே சென்னை நிர்வாகம் முயற்சி செய்யும். எனவே நிச்சயமாக இந்த வார இறுதியில் (பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதி) நடைபெற இருக்கின்ற ஏலத்தில் சென்னை அணி அவரை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது என்று ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

வெளிநாட்டு ஓபனிங் பேட்ஸ்மேன்களுக்கு அதிக போட்டி இருக்கும்

ஒவ்வொரு அணி நிர்வாகத்தின் பார்வையும் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் மீது குறிப்பாக வெளிநாட்டு ஓபனிங் பேட்ஸ்மேன்கள் மீது நிறைய இருக்கும். அந்த வரிசையில் டேவிட் வார்னர் மற்றும் குவின்டன் டி காக் ஆகியோர் மீது மற்ற அணிகளின் பார்வை அதிக அளவில் இருக்கும். அவர்கள் இருவரையும் கைப்பற்ற எவ்வளவு தொகை என்றாலும் அதை எந்தவித யோசனையும் இன்றி செலவு செய்து அவர்களை கைப்பற்றவே மற்ற அணி நிர்வாகங்கள் திட்டமிடும்.

குறிப்பாக டி காக் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார் எனவே இனி அவர் நிறைய டி20 போட்டிகளில் விளையாடுவார். இந்த ஒரு கூடுதல் காரணமும் இருப்பதால் இவர் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்பு உள்ளது என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.

- Advertisement -

அதேபோல இங்கிலாந்து அணியை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ எந்தவித பந்துவீச்சாளர் என்றாலும் பயமின்றி தனது அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்துவார். எனவே இவரும் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏதேனும் ஒரு அணி மூலமாக வாங்க படுவார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.