மழையால் மொத்தமாக முடிந்த ஆட்டம்… பாயின்ட்ஸ் டேபிள் என்ன மாற்றம்?

0
2931

மழையால் ஆட்டம் “நோ ரிசல்ட்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. புள்ளிப்பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்பதை பின்வருமாறு காண்போம்!

லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டி லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் போட்டியில் காயம் காரணமாக விளையாடவில்லை. தற்காலிக கேப்டனாக க்ருனால் பாண்டியா பொறுப்பேற்றார்.

துவக்க வீரர்களாக கைல் மேயர்ஸ் மற்றும் மனன் வோரா களம் இறங்கினர். லக்னோ அணிக்கு எதிர்பார்த்த துவக்கம் அமையவில்லை. 18 ரன்களுக்கு முதல் விக்கெட் போனது. 44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து, பரிதாபமான நிலைக்கு லக்னோ அணி தள்ளப்பட்டது.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த பூரான் மற்றும் ஆயுஸ் பதோனி இருவரும் ஆறாவது விக்கெட்டிற்கு 59 ரன்கள் சேர்த்தனர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பூரான் 31 பந்துகளில் 20 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

மறுமுனையில் அபாரமாக விளையாடி சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக அடித்துவந்த ஆயுஸ் பதோனி 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். இவருடைய அதிரடியான ஆட்டத்தினால், நூறு ரன்கள் கடப்பதே கடினம் என்று இருந்த லக்னோ அணி 125 ரன்களை எட்டியது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயுஸ் பதோனி 33 பந்துகளில் 59 ரன்கள் விலாசினார். இதில் நான்கு சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் அடங்கும்.

19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் அடித்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. மாலை 7 மணி வரை மழை நிற்காமல் பெய்துகொண்டே இருந்ததால் ஆட்டம் முடித்துக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிரப்பட்டது.

இதற்கு முன் இரண்டு அணிகளும் தலா 10 புள்ளிகள் பெற்றிருந்தன. ரன்ரேட் அடிப்படையில் லக்னோ அணி மூன்றாவது இடத்திலும் சிஎஸ்கே அணி நான்காவது இடத்திலும் இருந்தன. தற்போது தலா ஒரு புள்ளிகள் பெற்று, இரு அணிகளும் 11 புள்ளிகளில் இருக்கின்றன. சிஎஸ்கே அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. லக்னோ அணி இரண்டாவது ஆலயத்திற்கு முன்னேறி உள்ளது.